← Back

Aanaiyittal Aadukkiren Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Aa…aaa…aa.aaa…. Aaa…aa…aaa..aa…aaa Aa…aaa…aa.aaa…. Female : Aanaiyittaal aadugiren Azhudha vannam paadugiren Aanaiyittaal aadugiren Azhudha vannam paadugiren Female : Maalaiyitta paavathirkku Parigaaram thedugiren Aanaiyittaal aadugiren Azhudha vannam paadugiren Female : Thaarathai sabaiyil panayam veitha Andha dharman irandhaanae Ingu marupadi pirandhaanae Female : Dhraupathi maanam kaapatharkku Andha kannan vandhaanae Indha mangaiyin maanam kaapatharkku Andha annai varuvaala Maruvoor annai varuvaala Varuvaala …varuvaala… Female : Aanaiyittaal aadugiren Azhudha vannam paadugiren Female : Sandhaiyil maniviyai vittruvittoo Harichandran irandhaanae Avan sandhadhi ivandhaanae Female : Aadavar kaiyil poovaiyar endrum Adimai porulthaana Idhai yen ena ketka nee illaiyoo Un maunam muraithaana Maruvoor thaayae sarithaana Sarithaana…. sarithaana Female : Aanaiyittaal aadugiren Azhudha vannam paadugiren Female : Maarbodanaithu paal kodutha Un thaayum penn thaanae Andha inamum naan thaanae Female : Pettraval perai keduppadharkku Endha pillaiyum ninaipaana Mattravar thaaram thaaiyallavaa Idhai marandhae thoduvaana Maruvoor thaai thaan viduvaala Viduvaala…. viduvaala Female : Aanaiyittaal aadugiren Azhudha vannam paadugiren Maalaiyitta paavathirkku Parigaaram thedugiren
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பெண் : ஆஆஆஆ……. ஆஆஆஆஆ…. ஆஆஆஆ.. பெண் : ஆணையிட்டால் ஆடுகிறேன் அழுத வண்ணம் பாடுகிறேன் ஆணையிட்டால் ஆடுகிறேன் அழுத வண்ணம் பாடுகிறேன் பெண் : மாலையிட்ட பாவத்திற்கு பரிகாரம் தேடுகிறேன் ஆணையிட்டால் ஆடுகிறேன் அழுத வண்ணம் பாடுகிறேன்….. பெண் : தாரத்தை சபையில் பணயம் வைத்த அந்த தருமன் இறந்தானே இங்கு மறுபடி பிறந்தானே பெண் : திரௌபதி மானம் காப்பதற்கு அந்த கண்ணன் வந்தானே இந்த மங்கையின் மானம் காப்பதற்கு அந்த அன்னை வருவாளா மருவூர் அன்னை வருவாளா வருவாளா வருவாளா பெண் : ஆணையிட்டால் ஆடுகிறேன் அழுத வண்ணம் பாடுகிறேன் பெண் : சந்தையில் மனைவியை விற்றுவிட்டோ அரிச்சந்திரன் இறந்தானே அவன் சந்ததி இழந்தானே பெண் : ஆடவர் கையில் பூவையர் என்றும் அடிமை பொருள்தானா இதை ஏனென கேட்க நீ இல்லையோ உன் மௌனம் முறைதானா மருவூர் தாயே சரிதானா சரிதானா சரிதானா பெண் : ஆணையிட்டால் ஆடுகிறேன் அழுத வண்ணம் பாடுகிறேன் பெண் : மார்போடணைத்து பால் கொடுத்த உன் தாயும் பெண்தானே அந்த இனமும் நான்தானே பெற்றவள் பேரை கெடுப்பதற்கு எந்த பிள்ளையும் நினைப்பானா மற்றவர் தாரம் தாயல்லவா இதை மறந்தே தொடுவானா மருவூர் தாய்தான் விடுவாளா விடுவாளா விடுவாளா பெண் : ஆணையிட்டால் ஆடுகிறேன் அழுத வண்ணம் பாடுகிறேன் மாலையிட்ட பாவத்திற்கு பரிகாரம் தேடுகிறேன்…