← Back

En Kadhala Song Lyrics – Naatpadu Theral

Singer : Srinisha Jayaseelan Music by : N. R. Raghunanthan Female : En kaadhala Kaadhal vayadhu paarkkuma Naanum chinna kandru endru Indru sindhai maaruma Female : Vayadhal naam vaazhvu muriyuma Vaai mutham vayadhu ariyuma Nila vennila vayadhil moothadhillaiya Irundhum nilavu solli ilaiya alli malarvadhillaiya Female : En vaazhvil thandhai illaiyae Thandhai pol kanavan vendumae….aaa… Female : En kaadhala Kaadhal vayadhu paarkkuma Naanum chinna kandru endru Indru sindhai maaruma Female : Aanum pennum servadhu Aasai pokkil nervadhu Kaadhal needhi enbadhu Kaalam dhorum maarudhu Female : Vettukkiliyin rathama Vellaiyaga ulladhu Vidhigal ezhudhum yettilae Vidhivilakkum ulladhu Female : Aazhi romba moothadhu Aaru romba ilaiyadhu Aaru sendru serumbodhu Yaaru kelvi ketpadhu…aa….aa….aaa… Female : Kaadhal sindhum mazhaiyilae Kaalam dhesam azhiyudhae Engae sindhai azhiyudho Kaadhal angae malarudhae Female : Arivazhindhu pona pin Vayadhu vandhu thondruma Porul azhindhu pona pin Nizhal kidandhu vaazhuma Female : Aramirukkum vaazhvilae Muranirukkum enbadhal Muranirukkum vaazhvilum Aramirukkum illaiya…aa…aa…aa… Female : En kaadhala Kaadhal vayadhu paarkkuma Naanum chinna kandru endru Indru sindhai maaruma Female : En kaadhala Kaadhal vayadhu paarkkuma Naanum chinna kandru endru Indru sindhai maaruma
பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பெண் : என் காதலா காதல் வயது பார்க்குமா நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா பெண் : வயதால் நம் வாழ்வு முறியுமா வாய் முத்தம் வயது அறியுமா நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா பெண் : என்வாழ்வில் தந்தை இல்லையே தந்தைபோல் கணவன் வேண்டுமே…ஆஅ…. பெண் : என் காதலா காதல் வயது பார்க்குமா நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா பெண் : ஆணும் பெண்ணும் சேர்வது ஆசைப் போக்கில் நேர்வது காதல் நீதி என்பது காலம் தோறும் மாறுது பெண் : வெட்டுக்கிளியின் ரத்தமோ வெள்ளையாக உள்ளது விதிகள் எழுதும் ஏட்டிலே விதிவிலக்கும் உள்ளது பெண் : ஆழி ரொம்ப மூத்தது ஆறு ரொம்ப இளையது ஆறு சென்று சேரும்போது யாரு கேள்வி கேட்பது?…ஆஅ…. பெண் : காதல் சிந்தும் மழையிலே காலம் தேசம் அழியுதே எங்கே சிந்தை அழியுதோ காதல் அங்கே மலருதே பெண் : அறிவழிந்து போனபின் வயது வந்து தோன்றுமா பொருள் அழிந்து போனபின் நிழல் கிடந்து வாழுமா… பெண் : அறமிருக்கும் வாழ்விலே முரணிருக்கும் என்பதால் முரணிருக்கும் வாழ்விலும் அறமிருக்கும் இல்லையா…….ஆஅ…. பெண் : என் காதலா காதல் வயது பார்க்குமா நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா பெண் : என் காதலா காதல் வயது பார்க்குமா நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா