← Back

Kannan Pirantha Velaiyilae Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Kannan pirantha velaiyilae Antha devagi irunthaal kaavalilae Aval annan polae unnaamal Annan polae unnaamal Kaaval nindraan vaasalilae Thaayo siraiyinilae….yae…. Thanthaiyo veliyinilae….yae Female : Kannan pirantha velaiyilae Antha devagi irunthaal kaavalilae Female : Neeyum antha kannanai pola Geedhai solvaayo Neeyum antha kannanai pola Geedhai solvaayo Un thaayum thanathu thunaiyai Serum paathai solvaayaa Female : Aandavan illaa aalayaththil Naan aadidum vanna deepamadaa Aandavan illaa aalayaththil Naan aadidum vanna deepamadaa Yaarai sollo aavathenna Un annai seitha paavamadaa Annai seitha paavamadaa Female : Kannan pirantha velaiyilae Antha devagi irunthaal kaavalilae Female : Ooraar ketka vidukathai pottaal Unthan annaiyadaa….aa… Ooraar ketka vidukathai pottaal Unthan annaiyadaa…. Aval vazhve indru vidukadhaiyaanaal Vidaiyenna solvathadaa Vidaiyenna solvathadaa Female : Irukarai inaippathu nadhiyaagum Engal iruvarai piriththathu vithiyaagum Nadhi vazhiponaal karaiyundu Naam vithi vazhi ponaal yaarundu Vithi vazhi ponaal yaarundu Female : Kannan pirantha velaiyilae Antha devagi irunthaal kaavalilae Aval annan polae unnaamal Kaaval nindraan vaasalilae Thaayo siraiyinilae….yae…. Thanthaiyo veliyinilae….yae
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே அந்த தேவகி இருந்தாள் காவலிலே அவள் அண்ணன் போலே உண்ணாமல் அண்ணன் போலே உண்ணாமல் காவல் நின்றான் வாசலிலே தாயோ சிறையினிலே….ஏ…… தந்தையோ வெளியினிலே….ஏ….. பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே அந்த தேவகி இருந்தாள் காவலிலே பெண் : நீயும் அந்த கண்ணனைப்போல கீதை சொல்வாயோ நீயும் அந்த கண்ணனைப்போல கீதை சொல்வாயோ உன் தாயும் தனது துணையை சேரும் பாதை சொல்வாயோ பெண் : ஆண்டவன் இல்லா ஆலயத்தில் நான் ஆடிடும் வண்ண தீபமடா ஆண்டவன் இல்லா ஆலயத்தில் நான் ஆடிடும் வண்ண தீபமடா யாரை சொல்லி ஆவதென்ன உன் அன்னை செய்த பாவமடா அன்னை செய்த பாவமடா…….. பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே அந்த தேவகி இருந்தாள் காவலிலே பெண் : ஊரார் கேட்க விடுகதை போட்டாள் உந்தன் அன்னையடா…ஆ….. ஊரார் கேட்க விடுகதை போட்டாள் உந்தன் அன்னையடா அவள் வாழ்வே இன்று விடுகதையானால் விடையென்ன சொல்வதடா விடையென்ன சொல்வதடா பெண் : இருகரை இணைப்பது நதியாகும் எங்கள் இருவரை பிரித்தது விதியாகும் நதி வழிப்போனால் கரையுண்டு நாம் விதி வழிப்போனால் யாருண்டு விதி வழிப்போனால் யாருண்டு…… பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே அந்த தேவகி இருந்தாள் காவலிலே அவள் அண்ணன் போலே உண்ணாமல் காவல் நின்றான் வாசலிலே தாயோ சிறையினிலே….ஏ…. தந்தையோ வெளியினிலே…..ஏ……