← Back

Kannanukku Per Sootti Song Lyrics

Singer : P. Susheela and L. R. Eshwari Music by : M. S. Viswanathan Lyrics by : Aalangudi Somu Female : Kannanukku paer sootti Kaanbavargal paaraatti Kondaadum inbamallavo Intha katti magan aadi vara Thottilondru pottu vaiththu Paadugindra velaiyallavo… Paadugindra velaiyallavo… Female : Kannanukku paer sootti Kaanbavargal paaraatti Kondaadum inbamallavo Female : Muththu pavazham kondu Mella sirippaano Thaththi thaththi nadanthu Chellam konjuvaano Female : Muththu pavazham kondu Mella sirippaano Thaththi thaththi nadanthu Chellam konjuvaano Female : Mukkani thaen suvai Sollil vadippaano Annai sol kettiduvaano Kannan anantha paal kudippaano…. Female : Kannanukku paer sootti Kaanbavargal paaraatti Kondaadum inbamallavo Female : Ooraargal vaazhththi unnai Paaraattum velaiyilae Paer sootta mudiyaamal Pettra manam yaenguthadaa Female : Neeraadum imaiyoram Poraattam nadakkuthadaa Seeraatta paalootta thaaipaasam pirakkuthadaa Maganae……maganae….nee vaazhga…. Female : Kannanukku paer sootti Kaanbavargal paaraatti Kondaadum inbamallavo Intha katti magan aadi vara Thottilondru pottu vaiththu Paadugindra velaiyallavo… Paadugindra velaiyallavo… Female : Thanga pathakkam ondru Vaangi koduppaano Thaayennum pettakaththil Anbai niraippaano Thalaivargal varisaiyil idam pidippaano Tharanikku pugazh tharuvaano Kannan geedhaiyin vazhi nadappaano… Female : Geedhaiyil kannan sonnaan Kadamaithaan vaazhkkaiyendru Vedhaththilum viyaasan sonnaan Vaazhkkai kadamaikkendru Female : Geedhai vazhi naan nadanthu Kudumba nalamthanai ninainththu Paathiyilae unai piriyum Payanam vanthu saernthathadaa Maganae….maganae….nee vaazhga Females : Kannanukku paer sootti Kaanbavargal paaraatti Kondaadum inbamallavo Intha katti magan aadi vara Thottilondru pottu vaiththu Paadugindra velaiyallavo… Paadugindra velaiyallavo…
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : கண்ணனுக்கு பேர் சூட்டி காண்பவர்கள் பாராட்டி கொண்டாடும் இன்பமல்லவோ இந்த கட்டி மகன் ஆடி வர தொட்டிலொன்று போட்டு வைத்து பாடுகின்ற வேளையல்லவோ…. பாடுகின்ற வேளையல்லவோ…. பெண் : கண்ணனுக்கு பேர் சூட்டி காண்பவர்கள் பாராட்டி கொண்டாடும் இன்பமல்லவோ பெண் : முத்து பவழம் கொண்டு மெல்லச் சிரிப்பானோ தத்தி தத்தி நடந்து செல்லம் கொஞ்சுவானோ பெண் : முத்து பவழம் கொண்டு மெல்லச் சிரிப்பானோ தத்தி தத்தி நடந்து செல்லம் கொஞ்சுவானோ பெண் : முக்கனி தேன் சுவை சொல்லில் வடிப்பானோ அன்னை சொல் கேட்டிடுவானோ கண்ணன் ஆனந்த பால் குடிப்பானோ…… பெண் : கண்ணனுக்கு பேர் சூட்டி காண்பவர்கள் பாராட்டி கொண்டாடும் இன்பமல்லவோ பெண் : ஊரார்கள் வாழ்த்தி உன்னை பாராட்டும் வேளையிலே பேர் சூட்ட முடியாமல் பெற்ற மனம் ஏங்குதடா பெண் : நீராடும் இமையோரம் போராட்டம் நடக்குதடா சீராட்ட பாலூட்ட தாய்ப்பாசம் பிறக்குதடா மகனே…….மகனே…….நீ வாழ்க….. பெண் : கண்ணனுக்கு பேர் சூட்டி காண்பவர்கள் பாராட்டி கொண்டாடும் இன்பமல்லவோ இந்த கட்டி மகன் ஆடி வர தொட்டிலொன்று போட்டு வைத்து பாடுகின்ற வேளையல்லவோ…. பாடுகின்ற வேளையல்லவோ…. பெண் : தங்கப்பதக்கம் ஒன்று வாங்கிக் கொடுப்பானோ தாயென்னும் பெட்டகத்தில் அன்பை நிறைப்பானோ தலைவர்கள் வரிசையில் இடம் பிடிப்பானோ தரணிக்கு புகழ் தருவானோ கண்ணன் கீதையின் வழி நடப்பானோ பெண் : கீதையில் கண்ணன் சொன்னான் கடமைதான் வாழ்க்கையென்று வேதத்திலும் வியாசன் சொன்னான் வாழ்க்கை கடமைக்கென்று பெண் : கீதை வழி நான் நடந்து குடும்ப நலம்தனை நினைந்து பாதியிலே உனைப் பிரியும் பயணம் வந்து சேர்ந்ததடா மகனே…….மகனே…….நீ வாழ்க……. பெண்கள் : கண்ணனுக்கு பேர் சூட்டி காண்பவர்கள் பாராட்டி கொண்டாடும் இன்பமல்லவோ இந்த கட்டி மகன் ஆடி வர தொட்டிலொன்று போட்டு வைத்து பாடுகின்ற வேளையல்லவோ…. பாடுகின்ற வேளையல்லவோ….