← Back

Kurudarellam Koodi Koothadi Song Lyrics

Singer : C. S. Jayaraman Music by : Vishwanathan-Ramamoorthy Male : Kurudarellam koodi koothadi koothadi Kookural pottaalum podattum Innum thirudi porul serkkum thiranattra somberi Thindaadinaalum thindaadattum Male : Saadhi veri konda veenargal baedham paesi paesi Vilagi poi vaazhndhaalum vaazhattum Oru varusaikkul nilladha kalasam pol ivarellaam Thalai suttri veezhndhaalum veezhattum andha Male : Kurudarellam koodi koothadi koothadi Kookural pottaalum podattum Innum thirudi porul serkkum thiranattra somberi Thindaadinaalum thindaadattum Male : Keduvaargal endraikkum keduvaar Gunam kudi kondaar inbam thandhiduvar Male : Madhiyattra moodargal vazhukki vazhukki veezhndhu Madhikkapattu ponaalum pogattum innum Gadhi ketta kaaligal kaludhaigalai thottu Udhaipattu sethaalum saagattum verum Male : Padharaipol ulagathil payanattru thirivoorgal Edharkiraiyaanalum aagattum mannil Adhiga kalvi kattrum mudhukelumbattrorgal Anal pattri vendhaalum vaegattum andha Male : Kurudarellam koodi koothadi koothadi Kookural pottaalum podattum Innum thirudi porul serkkum thiranattra somberi Thindaadinaalum thindaadattum Male : Keduvaargal endraikkum keduvaar Gunam kudi kondaar inbam thandhiduvar Male : Aazham theriyaamal kaalai vittoor moozhgi Aattrodu poravadi singi azhudhu payan ennadi Sondha maanam thanai vittru maandhar muraikettu Veenaaga azhivaaradi singi meelum vazhi kaanaradi Male : Indha ulutharuendhanaalum Unmaigalai sonnaalum Karunthanil kollaaradi singi Kandapadi selvaradi mannil Male : Keduvaargal endraikkum keduvaar Gunam kudi kondaar inbam thandhiduvar Male : Kurudarellam koodi koothadi koothadi Kookural pottaalum podattum Innum thirudi porul serkkum thiranattra somberi Thindaadinaalum thindaadattum
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி கூக்குரல் போட்டாலும் போடட்டும் இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி திண்டாடினாலும் திண்டாடட்டும் ஆண் : சாதி வெறி கொண்ட வீணர்கள் பேதம் பேசி பேசி விலகிப்போய் வாழ்ந்தாலும் வாழட்டும் ஒரு வரிசைக்குள் நில்லாத கலசம் போல் இவரெல்லாம் தலை சுற்றி வீழ்ந்தாலும் வீழட்டும் அந்தக் ஆண் : குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி கூக்குரல் போட்டாலும் போடட்டும் இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி திண்டாடினாலும் திண்டாடட்டும் ஆண் : கெடுவார்கள் என்றைக்கும் கெடுவார் குணம் குடிகொண்டார் இன்பம் தந்திடுவார் ஆண் : மதியற்ற மூடர்கள் வழுக்கி வழுக்கி வீழ்ந்து மதிக்கப்பட்டுப் போனாலும் போகட்டும் இன்னும் கதி கெட்டக் காலிகள் கழுதைகளைத் தொட்டு உதைபட்டுச் செத்தாலும் சாகட்டும் வெறும் ஆண் : பதரைப்போல் உலகத்தில் பயனற்றுத் திரிவோர்கள் எதற்கிரையானாலும் ஆகட்டும் மண்ணில் அதிகக் கல்வி கற்றும் முதுகெலும்பற்றோர்கள் அனல் பற்றி வெந்தாலும் வேகட்டும் அந்தக் ஆண் : குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி கூக்குரல் போட்டாலும் போடட்டும் இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி திண்டாடினாலும் திண்டாடட்டும் ஆண் : கெடுவார்கள் என்றைக்கும் கெடுவார் குணம் குடிகொண்டார் இன்பம் தந்திடுவார் ஆண் : ஆழம் தெரியாமல் காலை விட்டோர் மூழ்கி ஆற்றோடே போவாரடி சிங்கி அழுது பயனென்னடி சொந்த மானம் தனை விற்று மாந்தர் முறைக்கெட்டு வீணாக அழிவாரடி சிங்கி மீளும் வழி காணாரடி ஆண் : இந்த உலுத்தருக்கெந்நாளும் உண்மைகளை சொன்னாலும் கருத்தினில் கொள்ளாரடி சிங்கி கண்டபடி செல்வாரடி மண்ணில் ஆண் : கெடுவார்கள் என்றைக்கும் கெடுவார் குணம் குடிகொண்டார் இன்பம் தந்திடுவார் ஆண் : குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி கூக்குரல் போட்டாலும் போடட்டும் இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி திண்டாடினாலும் திண்டாடட்டும்