← Back

Naakku Chevandhavarae Song Lyrics

Singer : Kiruthiga Music by : Vagu Mazan Female : {Oruvaai vethalaiyae Iruvaai undakadhai Thiruvaai marnthaalum Thinna rusi maranthirumoo?….} (2) Female : {Naakku sevandhavare Naalezhuthu mandhiriyae Mookku vedachavare Munn vazhukkai mannavarae} (2) Female : Koothu mudinjiruchu Komaripulla edhukkunnu Paathum paakkama Paraparannu porreeroo! Female : {Oruvaai vethalaiyae Iruvaai undakadhai Thiruvaai marnthaalum Thinna rusi maranthirumoo?….} (2) Female : Vaikkapor padapukku Vada iruttu moolaiyila Akkapor senjakadhai Aiyyanukku maranthiruchoo?… Female : Savara kathikku Thappicha kurumudiyil Mugara urasunadhu Muzhusathaan maranthiruchoo?…. Female : Mottu mottu malligaiya Mutti mutti thattivittu Muthu muthu vervai sottu Mondhakadhai maranthiruchoo?…. Female : Vaazhaithoppukkulla Valavi odachakadhai Vaazhai maranthirukkum Valathu kaiyi maranthirumoo?… Female : {Oruvaai vethalaiyae Iruvaai undakadhai Thiruvaai marnthaalum Thinna rusi maranthirumoo?….} (2) Female : Thaenyeri poirundha Sirikkimava thalamayiru Penyeri ponadhaiyaa Pechuvaarthai illama Female : Pulli thaemalukku Pudhu madippukkum Karupatti udhatukkum Karuthakkili alaiyudhappa Female : Aarucharam sangiliyoo Attigai kekalaiyae Manja kayithukku Manasukkulla arikkuthaiyaa Female : Aambalaiga sagavaasam Aduthoruthi vaara varaikkum Pombalaiga sagavaasam Pudhai kaadu poravaraikkum Female : {Oruvaai vethalaiyae Iruvaai undakadhai Thiruvaai marnthaalum Thinna rusi maranthirumoo?….} (2)
பாடகி : கிருத்திகா இசை அமைப்பாளர் : வகு மாலன் பெண் : ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ?…(2) பெண் : நாக்குச் செவந்தவரே நாலெழுத்து மந்திரியே மூக்கு வெடச்சவரே முன்வழுக்கை மன்னவரே …(2) பெண் : கூத்து முடிஞ்சிருச்சு கொமரிப்புள்ள எதுக்குன்னு பாத்தும் பாக்காமப் பரபரன்னு போறீரோ!.. பெண் : ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ? …(2) பெண் : வைக்கப் போர்ப் படப்புக்கு வடஇருட்டு மூலையில அக்கப்போர் செஞ்சகதை அய்யனுக்கு மறந்திருச்சோ?… பெண் : சவரக் கத்திக்குத் தப்பிச்ச குறுமுடியில் முகர ஒரசுனது முழுசாத்தான் மறந்திருச்சோ?… பெண் : மொட்டு மொட்டு மல்லிகையை முட்டிமுட்டித் தட்டிவிட்டு முத்துமுத்து வேர்வைச் சொட்டு மோந்தகதை மறந்திருச்சோ?… பெண் : வாழைத் தோப்புக்குள்ள வளவி ஒடச்சகதை வாழை மறந்திருக்கும் வலதுகையி மறந்திருமோ?…. பெண் : ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ? …(2) பெண் : தேனேறிப் போயிருந்த சிறுக்கிமக தலைமயிரு பேனேறிப் போனதய்யா பேச்சுவார்த்தை இல்லாம பெண் : புள்ளித் தேமலுக்கும் புதுவேட்டி மடிப்புக்கும் கருப்பட்டி ஒதட்டுக்கும் கருத்தகிளி அலையுதய்யா பெண் : ஆறுசரம் சங்கிலியோ அட்டிகையோ கேக்கலையே மஞ்சக் கயித்துக்கு மனசுக்குள்ள அரிக்குதய்யா பெண் : ஆம்பளைக சகவாசம் அடுத்தொருத்தி வாரவரைக்கும் பொம்பளைக சகவாசம் புதைகாடு போறவரைக்கும் பெண் : ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ? …(2)