← Back

Summa Kidantha Sothukku Kashtam Song Lyrics

Singers : P. Leela and Jikki Music by : G. Ramanathan Females : Summaa irundhaa sothukku nashtam Sombal valarndhaa yerpadum kashtam Summaa irundhaa sothukku nashtam Sombal valarndhaa yerpadum kashtam Unmaiyodu uzhaikkonum Thaanae thannannaa machaan Ondru serndhu vaazhonum Thaanae thannannaa Male : Ha haei… Female : Padicha velaikku pala per nottam Baakki velaikku aal thindaattam Female : Padicha velaikku pala per nottam Baakki velaikku aal thindaattam Female : Kodutha velaiyai Mudippadhu sraeshtam Female : Kudisai thozhilil Venum naattam Females : Unmaiyodu uzhaikkonum Thaanae thannannaa machaan Ondru serndhu vaazhonum Thaanae thannannaa Male : Aeheh haei… Female : Appan thozhilai Avanadhu pillai Soppanathilumae ninaippadumillai Female : Appan thozhilai Avanadhu pillai Soppanathilumae ninaippadumillai Female : Ippadi cheivadhanaalae thollai Female : Yerpattadhendraal ketpadhumillai Females : Therinja thozhilai cheidhaalae Thaanae thannannaa machaan Thaazhvumillai adhanaalae Thaanae thannannaa Male : Ha haei… Female : Velai velaiyendru Olamittazhudhaa Aalai thediyadhu Veettukku varudhaa Female : Velai velaiyendru Olamittazhudhaa Aalai thediyadhu Veettukku varudhaa Female : Moolaiyodu nalla Muyarchiyumirundhaa Female : Velaikkaedhu panjam Vibaram puriyudhaa Females : Paadu pattaal palanundu Thaanae thannannaa machaan Panjam theerkka vazhiyundu Thaanae thannannaa Male : Haha haei… Female : Malai thanil Siriyadhum periyadhum undu Manidhargal arivilum Adhu pol undu Female : Malai thanil Siriyadhum periyadhum undu Manidhargal arivilum Adhu pol undu Female : Ulaginil avaravar Thiramaiyum kandu Female : Thozhiladhu purivadhu Migha migha nandru Females : Unmaiyodu uzhaikkonum Thaanae thannannaa machaan Ondru serndhu vaazhonum Thaanae thannannaa Male : Aeheh haei… aeheh haei…
பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன் பெண்கள் : சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம் சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம் சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம் சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம் உண்மையோடு உழைக்கணும் தானே தன்னன்னா மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஆண் : ஹ ஹேய் பெண் : படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம் பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம் படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம் பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம் பெண் : கொடுத்த வேலையை முடிப்பது சிரேஷ்டம் பெண் : குடிசை தொழிலில் வேணும் நாட்டம் பெண்கள் : உண்மையோடு உழைக்கணும் தானே தன்னன்னா மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஆண் : ஏஹே ஹே…. பெண் : அப்பன் தொழிலை அவனது பிள்ளை சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை பெண் : அப்பன் தொழிலை அவனது பிள்ளை சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை பெண் : இப்படி செய்வதனாலே தொல்லை பெண் : ஏற்பட்டதென்றால் கேட்பதுமில்லை பெண்கள் : தெரிஞ்ச தொழிலை செய்தாலே தானே தன்னன்னா மச்சான் தாழ்வுமில்லை அதனாலே தானே தன்னன்னா ஆண் : ஹ ஹேய் பெண் : வேலை வேலையென்று ஓலமிட்டழுதா ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா பெண் : வேலை வேலையென்று ஓலமிட்டழுதா ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா பெண் : மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா பெண் : வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா பெண்கள் : பாடு பட்டால் பலனுண்டு தானே தன்னன்னா மச்சான் பஞ்சம் தீர்க்க வழியுண்டு தானே தன்னன்னா ஆண் : ஹே ஹ ஹேய் பெண் : மலைதனில் சிறியதும் பெரியதும் உண்டு மனிதர்கள் அறிவிலும் அது போலுண்டு பெண் : மலைதனில் சிறியதும் பெரியதும் உண்டு மனிதர்கள் அறிவிலும் அது போலுண்டு பெண் : உலகினில் அவரவர் திறமையும் கண்டு பெண் : தொழிலது புரிவது மிகமிக நன்று பெண்கள் : உண்மையோடு உழைக்கணும் தானே தன்னன்னா மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஆண் : ஏஹே ஹே….ஏஹே ஹே….