← Back

Ayirathil Naan Oruvan Song Lyrics

Singer : Mano Music by : A. R. Rahman Male : Aaayiraththil naan oruvan Neengal aanaiyittaal padai thalaivan Male : Naan ninaiththaal Ninaiththadhu nadakkum nadandhapin Ezhaiyin poomugam sirikkum Male : Naan azhaiththaal Malaigalum nadhiyum kadalgalum Oorukkul oorvalam nadaththum Male : Indha ulagam kadhavadaithaal Etti udhaippen adhu thirakkum Kunindha ullam thunindhu vittaal Ezhaikkum mella mella Sorggam pirakkum Male : Aaayiraththil naan oruvan Neengal aanaiyittaal padai thalaivan Chorus : …………………………………. Male : Arasanaagattumae Arasiyaagattumae Kutrangal yaar seidhaalum Thatti kettu thaduppen Dharmaththin pakkam iruppen Male : Netriyin vervai thuli Nilaththil veezhvadharkul Uzhaiththa makkalukku Koolivaangi koduppen Unmaikku kaaval iruppen Male : Indha ulagam kadhavadaithaal Etti udhaippen adhu thirakkum Kunindha ullam thunindhu vittaal Ezhaikkum mella mella Sorggam pirakkum Male : Aaayiraththil naan oruvan Neengal aanaiyittaal padai thalaivan Male : Lala la aalaa la la la la….. ……………………………………… Male : Puratchi malarattumae Punnagai thavazhattumae Ovvoru veettukkullum Ovvoru sooriyan Sondhaththil jolikkattumae Male : Vaazhkkai vidiyattumae Varumai ozhiyattumae Uzhaikkum makkalukku Ulagangal sondham Unmaigal theliyattumae Male : Ini ezhunjaayiru ezhuga Indha irul koottangal ozhiga Pazhaiya pagai padaiyeduthaal Kathi puthi rendum kondu venruviduga Male : Aaayiraththil naan oruvan Neengal aanaiyittaal padai thalaivan Male : Naan ninaiththaal Ninaiththadhu nadakkum nadandhapin Ezhaiyin poomugam sirikkum Male : Naan azhaiththaal Malaigalum nadhiyum kadalgalum Oorukkul oorvalam nadaththum Male : Indha ulagam kadhavadaithaal Etti udhaippen adhu thirakkum Kunindha ullam thunindhu vittaal Ezhaikkum mella mella Sorggam pirakkum
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : ஆயிரத்தில் நான் ஒருவன் நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன் ஆண் : நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்த பின் ஏழையின் பூ முகம் சிரிக்கும் ஆண் : நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும் ஊருக்குள் ஊர்வலம் நடத்தும் ஆண் : இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும் குனிந்த உள்ளம் துணிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும் ஆண் : ஆயிரத்தில் நான் ஒருவன் நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன் குழு : ………………….. ஆண் : அரசனாகட்டுமே அரசியாகட்டுமே குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கேட்டு தடுப்பேன் தர்மத்தின் பக்கம் இருப்பேன் ஆண் : நெற்றியின் வேர்வை துளி நிலத்தில் வீழ்வதற்குள் உழைத்த மக்களுக்கு கூலி வாங்கிக் கொடுப்பேன் உண்மைக்கு காவல் இருப்பேன் ஆண் : இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும் குனிந்த உள்ளம் துணிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும் ஆண் : ஆயிரத்தில் நான் ஒருவன் நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன் ஆண் : ………………………….. ஆண் : புரட்சி மலரட்டுமே புன்னகை தவழட்டுமே ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன் சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே ஆண் : வாழ்க்கை விடியட்டுமே வறுமை ஒழியட்டுமே உழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம் உண்மைகள் தெளியட்டுமே ஆண் : இனி எழுஞாயிறு எழுக இந்த இருள் கூட்டங்கள் ஒழிக பழைய பகை படையெடுத்தால் கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக ஆண் : ஆயிரத்தில் நான் ஒருவன் நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன் ஆண் : நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்த பின் ஏழையின் பூ முகம் சிரிக்கும் ஆண் : நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும் ஊருக்குள் ஊர்வலம் நடத்தும் ஆண் : இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும் குனிந்த உள்ளம் துணிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்