← Back

Muthamma Ennai Songs Lyrics

Singers : S. N. Surendar and S. P. Sailaja Music by : S.P. Balasubrahmanyam Female : Muththammaa ennai moodi vaikka vendum Endru sattammaa Vandhu kollai kondu pongal Enna kuttrammaa Idhil aan yenna penn yenna summaa Male : Muththammaa unnai moodi vaikka vendum Endru sattammaa Unnai kollai kolla vendum Enna kuttrammaa Idhil aan yenna penn yenna summaa Male : Devadhaikkum achcham undu Theerndha pinnum michcham undu Thiththikkum sangeedham undu Penngal illaadha swargaththin Perai maattrungalen..ah..ha Female : Bhakthi indha pennil undu Mukththi indha kannil undu Per inbam veru engae raajaa Dhegham ippodhu soodaachchu Thaenai oottrungalen Male : Engu sendra podhum Karkal mannodu Yenna sonna podhum Aanmai pennodu Muththam endra Muthedukka poraadu Mukkuliththu moochu Mutta poradu Female : Gangai pogum pokkil Kadalai thaanae podum Sathanghal yaar seivadhu… Male : Muththammaa unnai moodi vaikka vendum Endru sattammaa Unnai kollai kolla vendum Enna kuttrammaa Idhil aan yenna penn yenna summaa Female : Achcham paadhi naanam paadhi Andha kaalam pennin thaedhi Ippodhu yen andha needhi Vetkka pattalae innaalil Vetkka kedu allavaa Male : Kaadhal paadhi kaamam paadhi Anbu paadhi aasai paadhi Illai endru yaar solla koodum Muththam yaar ingae thandhaalum Inbam ondrallavaa Female : Paththinikkum aasai undu Vaazhattum Paththiyanghal thevai illai Theerattum Aadai endra poimai ingae Pogattum Dhegam ennum unmai mattum Vaazhattum Male : Mannil vinnai kandu Vinnil mannai kandu Bhoogolam thadumaarattum Female : Muththammaa ennai moodi vaikka vendum Endru sattammaa Vandhu kollai kondu pongal Enna kuttrammaa Idhil aan yenna penn yenna summaa Male : Muththammaa unnai moodi vaikka vendum Endru sattammaa Unnai kollai kolla vendum Enna kuttrammaa Idhil aan yenna penn yenna summaa
பாடகி : எஸ்.பி. சைலஜா பாடகர் : எஸ்.என். சுரேந்தா் இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெண் : முத்தம்மா என்னை மூடி வைக்க வேண்டும் என்று சட்டம்மா வந்து கொள்ளை கொண்டு போங்கள் என்ன குற்றம்மா இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா ஆண் : முத்தம்மா உன்னை மூடி வைக்க வேண்டும் என்று சட்டம்மா உன்னை கொள்ளை கொள்ள வேண்டும் என்ன குற்றம்மா இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா ஆண் : தேவதைக்கும் அச்சம் உண்டு தீர்ந்த பின்னும் மிச்சம் உண்டு தித்திக்கும் சங்கீதம் உண்டு பெண்கள் இல்லாத ஸ்வர்கத்தின் பேரை மாற்றுங்களேன் ஆ ஹா பெண் : பக்தி இந்த பெண்ணில் உண்டு முக்தி இந்த கண்ணில் உண்டு பேர் இன்பம் வேறு எங்கே ராஜா தேகம் இப்போது சூடாச்சு தேனை ஊற்றுங்களேன் ஆண் : எங்கு சென்ற போதும் கற்கள் மண்ணோடு என்ன சொன்ன போதும் ஆண்மை பெண்ணோடு முத்தம் என்ற முத்தெடுக்க போராடு முக்குளித்து மூச்சு முட்ட போராடு பெண் : கங்கை போகும் போக்கில் கடலை தானே போடும் சாதங்கள் யார் செய்வது ஆண் : முத்தம்மா உன்னை மூடி வைக்க வேண்டும் என்று சட்டம்மா உன்னை கொள்ளை கொள்ள வேண்டும் என்ன குற்றம்மா இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா பெண் : அச்சம் பாதி நாணம் பாதி அந்த காலம் பெண்ணின் தேதி இப்போது ஏன் அந்த நீதி வெட்க பட்டாலே இந்நாளில் வெட்க கேடு அல்லவா ஆண் : காதல் பாதி காமம் பாதி அன்பு பாதி ஆசை பாதி இல்லை என்று யார் சொல்ல கூடும் முத்தம் யார் இங்கே தந்தாலும் இன்பம் ஒன்றல்லவா பெண் : பத்தினிக்கும் ஆசை உண்டு வாழட்டும் பத்தியங்கள் தேவை இல்லை தீரட்டும் ஆடை என்ற பொய்மை இங்கே போகட்டும் தேகம் என்னும் உண்மை மட்டும் வாழட்டும் ஆண் : மண்ணில் விண்ணை கண்டு விண்ணில் மண்ணை கண்டு பூலோகம் தடு மாறட்டும் பெண் : முத்தம்மா என்னை மூடி வைக்க வேண்டும் என்று சட்டம்மா வந்து கொள்ளை கொண்டு போங்கள் என்ன குற்றம்மா இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா ஆண் : முத்தம்மா உன்னை மூடி வைக்க வேண்டும் என்று சட்டம்மா உன்னை கொள்ளை கொள்ள வேண்டும் என்ன குற்றம்மா இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா