← Back

Usura Vachan Mama Song Lyrics

Singer : Swarnalatha Music by : Deva Female : Usura vachaen mama Neenga odhungi pogalaamaa Paasam vachaen mama Neenga bayanthu odalaamaa Female : {Usura vachaen mama Neenga odhungi pogalaamaa Paasam vachaen mama Neenga bayanthu odalaamaa} (2) Female : Yaei….puliya maraththa paaru Puliya maraththa paaru Puliyamara thoppukkullae poongaavana veetta paaru Poongaavana veettukkullae machchaanae Namma pudhukudiththanam pogalaamae machanae Female : Yaei aalamaraththa paaru aalamaraththa paaru Aalamara thoppukkullae azhagaana kootta paaru Azhagaana koottukullae machchaanae Naama aadipaadi irukkalaamae machchaanae Female : Naan kaadhukku thodu kettu Kadukadunnu pesinaenaa Mookkukku kallu kettu Moganjsulichchu ninnaenaa Kazhuththukku nagai kettu Kandapadithaan pesinaenaa Kaalukku kozhusu kettu Kobapattuththaan ninnaenaa Female : Aasa vachcha nesa machchaan Anbaththaanae kettaen Oru manjaththaali kettaen Female : Thenna maraththa paaru thenna maraththa paaru Thenna mara thoppukkullae Thendral vanthu veesum paaru Thendraloda saernthu naama machchaanae Oru themmaanguthaan paadalaamae machchaanae Female : Haei….koiyyaa maraththa paaru Koiyyaa maraththa paaru Koiyyaa mara thoppukkullae Konji pesum kuyila paaru Konji pesum kuyila pola machchaanae Naama koodi pesi irukkalaamae machchaanae Female : Usura vachaen mama Neenga odhungi pogalaamaa Paasam vachaen mama Neenga bayanthu odalaamaa
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பெண் : உசுர வச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா பெண் : {உசுர வச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா} (2) பெண் : ஏய்……புளிய மரத்த பாரு புளிய மரத்த பாரு புளியமர தோப்புக்குள்ளே பூங்காவன வீட்டப் பாரு பூங்காவன வீட்டுக்குள்ளே மச்சானே நம்ம புதுக்குடித்தனம் போகலாமே மச்சானே பெண் : ஏய் ஆலமரத்த பாரு ஆலமரத்த பாரு ஆலமர தோப்புக்குள்ளே அழகான கூட்டப் பாரு அழகான கூட்டுக்குள்ளே மச்சானே நாம ஆடிப்பாடி இருக்கலாமே மச்சானே பெண் : நான் காதுக்கு தோடு கேட்டு கடுகடுன்னு பேசினேனா மூக்குக்கு கல்லு கேட்டு மொகஞ்சுளிச்சு நின்னேனா கழுத்துக்கு நகை கேட்டு கண்டபடிதான் பேசினேனா காலுக்கு கொலுசு கேட்டு கோபப்பட்டுத்தான் நின்னேனா பெண் : ஆச வச்ச நேச மச்சான் அன்பத்தானே கேட்டேன் ஒரு மஞ்சத்தாலி கேட்டேன் பெண் : தென்ன மரத்த பாரு தென்ன மரத்தப் பாரு தென்னமரத் தோப்புக்குள்ளே தென்றல் வந்து வீசும் பாரு தென்றலோட சேர்ந்து நாம மச்சானே ஒரு தெம்மாங்குதான் பாடலாமே மச்சானே பெண் : ஹேய்……கொய்யா மரத்த பாரு கொய்யா மரத்த பாரு கொய்யாமரத் தோப்புக்குள்ளே கொஞ்சி பேசும் குயிலப்பாரு கொஞ்சிப் பேசும் குயிலப் போல மச்சானே நாம கூடிப் பேசி இருக்கலாமே மச்சானே பெண் : உசுர வச்சேன் மாமா நீங்க ஒதுங்கி போகலாமா பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா