← Back

Naalai Oru Poo Malarum Song Lyrics

Singers : Uthara Unnikrishnan, Shilvi Sharon and Padmaja Sreenivasan Music by : Rajiv Menon Female : Naalai oru poo malarum Naalu dhisai vaasam varum Saarndhulla soozhalukku Soundharya laharidharum Female : Naalai oru poo malarum Naalu dhisai vaasam varum Saarndhulla soozhalukku Soundharya laharidharum Female : Thaavarangal kai thattum Thaai chedikku kondattam Vinmeen pondradhoru manmeen naan endru Vaan veliyai paarthu vannamalar kannadikkum Female : Azhiyum porulodu Azhiyaadha perazhagu Serndhavidham enganamo..hoo..oo Deivangal uraiyaadum Deivangal uraiyaadum Chorus : {Poo poo poovaagi Poo poo poovaagi Poovaai naamaagi..}(2) Female : Hoo ooo haa…. Naalai oru poo malarum Chorus : Poo malarum Female : Naalu dhisai vaasam varum Chorus : Vaasam varum Female : Saarndhulla soozhalukku Soundharya laharidharum Female : Saayam pona vaazhvodu Sattendru niramoottum Kaatrinaithu vaithu Kaayavaithu manamoottum Female : Varivandu pasiyaara Vaa vendru thaenoottum Undaadiya kalaippaara Ul veettil manjamidum Female : Kulamagalin kuzhal serndhaal Kulam valarkkum porulaagum Poo koodai serndhaloo Pookkaari unavaagum Chorus : Poo poo poovaagi Poo poo poovaagi Poovaai naamaagi Female : Sannidhi serndhaloo Saamikku varamaagum Sarugaai ponaalum Bhoomikku uramaagum Female : Manangollum medaiyilae Mangalathin manamaagum Padamaagum velaiyilo Padaikkindra charamaagum Female : Chinnanjiru poovodu Ennenna peruvaazhvu Nootrandu vaazhvodu Namakkunda poo vaazhvu Chorus : {Poo poo poovaagi Poo poo poovaagi Poovaai naamaagi} (2) Female : Naalai oru poo malarum Naalu dhisai vaasam varum Saarndhulla soozhalukku Soundharya laharidharum
பாடகர்கள் : உத்தாரா உன்னிகிருஷ்ணன், சில்வி ஷரோன் மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : ராஜீவ் மேனன் பெண் : நாளை ஒரு பூ மலரும் நாலு திசை வாசம் வரும் சார்ந்துள்ள சூழலுக்கு சௌந்தர்யா லஹரிதரும் பெண் : நாளை ஒரு பூ மலரும் நாலு திசை வாசம் வரும் சார்ந்துள்ள சூழலுக்கு சௌந்தர்யா லஹரிதரும் பெண் : தாவரங்கள் கை தட்டும் தாய் செடிக்கு கொண்டாட்டம் விண்மீன் போன்றதொரு மண்மீன் நான் என்று வான் வெளியை பார்த்து வண்ணமலர் கண்ணடிக்கும் பெண் : அழியும் பொருளோடு அழியாத பேரழகு சேர்ந்தவிதம் எங்கனமோ.. ஹோ.. ஓ தெய்வங்கள் உரையாடும் தெய்வங்கள் உரையாடும் குழு : {பூ பூ பூவாகி பூ பூ பூவாகி பூவாய் நாமாகி..} (2) பெண் : ஹோ ஓ ஹா…. நாளை ஒரு பூ மலரும் குழு : பூ மலரும் பெண் : நாலு திசை வாசம் வரும் குழு : வாசம் வரும் பெண் : சார்ந்துள்ள சூழலுக்கு சௌந்தர்யலஹரிதரும் பெண் : சாயம் போன வாழ்வோடு சட்டென்று நிறமூட்டும் காற்றிணைத்து வைத்து காயவைத்து மணமூட்டும் பெண் : வாரிவந்து பசியாற வாவென்று தேனூட்டும் உண்டாடிய களைப்பாற உல் வீட்டில் மஞ்சமிதும் பெண் : குலமகளின் குழல் சேர்ந்தால் குலம் வளர்க்கும் பொருளாகும் பூ கூடை சேர்ந்தாளோ பூக்காரி உணவாகும் குழு : பூ பூ பூவாகி பூ பூ பூவாகி பூவாய் நாமாகி பெண் : சந்நிதி சேர்ந்தாளோ சாமிக்கு வரமாகும் சருகாய் போனாலும் பூமிக்கு உரமாகும் பெண் : மனங்கொள்ளும் மேடையிலே மங்களத்தின் மணமாகும் படமாகும் வேளையிலோ படைக்கின்ற சரமாகும் பெண் : சின்னஞ்சிறு பூவோடு என்னென்ன பெருவாழ்வு நூற்றாண்டு வாழ்வோடு நமக்குண்ட பூ வாழ்வு குழு : {பூ பூ பூவாகி பூ பூ பூவாகி பூவாய் நாமாகி} (2) பெண் : நாளை ஒரு பூ மலரும் நாலு திசை வாசம் வரும் சார்ந்துள்ள சூழலுக்கு சௌந்தர்ய லஹரிதரும்