← Back

Mogana Pon Chithiram Song Lyrics

Singers : P. Susheela and Vani Jayaram Music by : Shankar Ganesh Lyrics by : Madhuri Pachaiappan Female : Mogana pon chithiramthan naanadi Ennodu mothi nadanamaduvathu yaaradi yaaradi Female : Mogana pon chithiramthan naanadi Ennodu mothi nadanamaduvathu yaaradi yaaradi Female : Aadi varum pon vilakku naanadi Ennodu aattathile pottiyittu paaradi paaradi Female : Naattaikurichi paadi naanaduven naattiyam Nalina kalai pottiyile naan velluven nichayam Female : Ettu thisaigalilum en sathangai oli ketkum Vettum vizhi asaippil vinnagame asainthaadum Female : Kotti muzhukkugirai keerthiyellaam pesugiraai Itta adi itharku ethiraaga aadadi Female : Sollukku sol yenadi Puruva villuku bathil solladi Naan illaatha idaiyaada iru thanga kudamaada Nillamal suzhandraaduven Maathar nenjellaam kuzhainthaduven Female : Kaathirendil kuzhaiyaada kaiyirandil valaiyaada Kaalirendil silambaada kannirendil oliyaada Kaarigai naan sathiraaduven bharatha kalaiyinile mudi sooduven Female : Bharatha kalai pazhaiya kathai thaanadi athil Paarpatharku pagattellaam yethadi yethadi Female : Panbai valarpathu thaan kalaigaladi athil Pagattukal nuzhaivathendraal kuraigaladi kuraigaladi Female : Alukki kulukki thalukki minukkiye Aadaamal aaduvathu naattiyama Female : Anubavam unakku vanthiduma en Anubavam unakku vanthiduma Female : Kodikku nelivai koduthavan yaaradi Udukkai kandu naan anjuvenaa Tholviyai kandu naan kenjuvenaa Naan jeyathile mithakkum maalini Naan jeyathil pirantha chithra Female : Vithaiyai kaattadi paarkkalam En vegathil aadadi paarkkalam
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : மாதுரி பச்சையப்பன் பெண் : மோகன பொன் சித்திரம்தான் நானடி என்னோடு மோதி நடனமாடுவது யாரடி யாரடி பெண் : மோகன பொன் சித்திரம்தான் நானடி என்னோடு மோதி நடனமாடுவது யாரடி யாரடி பெண் : ஆடி வரும் பொன் விளக்கு நானடி என்னோடு ஆட்டத்திலே போட்டியிட்டு பாரடி பாரடி பெண் : நாட்டைக்குறிச்சி பாடி நானாடுவேன் நாட்டியம் நளின கலை போட்டியிலே நான் வெல்லுவேன் நிச்சயம் பெண் : எட்டுத் திசைகளிலும் என் சதங்கை ஒலி கேட்கும் வெட்டும் விழி அசைப்பில் விண்ணகமே அசைந்தாடும் பெண் : கொட்டி முழக்குகிறாய் கீர்த்தியெல்லாம் பேசுகிறாய் இட்ட அடி இதற்கு எதிராக ஆடடி…….. பெண் : சொல்லுக்கு சொல் ஏனடி புருவ வில்லுக்கு பதில் சொல்லடி நான் இல்லாத இடையாட இரு தங்க குடமாட நில்லாமல் சுழன்றாடுவேன் மாதர் நெஞ்செல்லாம் குழைந்தாடுவேன் பெண் : காதிரெண்டில் குழையாட கையிரெண்டில் வளையாட காலிரெண்டில் சிலம்பாட கண்ணிரெண்டில் ஒளியாட காரிகை நான் சதிராடுவேன் பரதக் கலையினிலே முடி சூடுவேன் பெண் : பரதக்கலை பழையக் கதை தானடி – அதில் பார்ப்பதற்கு பகட்டெல்லாம் ஏதடி ஏதடி பெண் : பண்பை வளர்ப்பதுதான் களைகளடி அதில் பகட்டுகள் நுழைவதென்றால் குறைகளடி குறைகளடி பெண் : அலுக்கி குலுக்கி தளுக்கி மினுக்கியே ஆடாமல் ஆடுவது நாட்டியமா பெண் : அனுபவம் உனக்கு வந்திடுமா என் அனுபவம் உனக்கு வந்திடுமா பெண் : கொடிக்கு நெளிவை கொடுத்தவன் யாரடி உடுக்கை கண்டு நான் அஞ்சுவேனா தோல்வியைக் கண்டு நான் கேஞ்சுவேனா நான் ஜெயத்திலே மிதக்கும் மாலினி நான் ஜெயத்தில் பிறந்த சித்ரா பெண் : வித்தையைக் காட்டடி பார்க்கலாம்….. என் வேகத்தில் ஆடடி பார்க்கலாம்……