← Back

Vasanthangal Varum Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Vasanthangal varum munbae veyil vanthathae Mazhaikaala megangal kalaigindrathey Vasanthangal varum munbae veyil vanthathae Mazhaikaala megangal kalaigindrathey Ponnaananaal vilai illai Kannaanaal imai illai Female : Ilai undu malar undu kani illaiyae Kani ondru kai vanthu kiliyillaiyae Aval veenai tharum paadal orae raagamae Anantham adhil illai orae sogamae Female : Ponnaananaal vilai illai Kannaanaal imai illai Female : Kavi ondru varumendru yaedaanaval Sila naalil verum thaalil kodaanaval Pani kaalam kuyil paada koodaanaval Padikkaamal mudikindra paattaanaval Female : Ponnaananaal vilai illai Kannaanaal imai illai Female : Mana chinnam kazhuththodu sirikkindrathae Malar kinnam nerupaaga kodhikkindrathae Ninaikkindra manam mattum ninaikkindrathae Thadukkindra vidhi yaedho thadukindrathae Female : Ponnaananaal vilai illai Kannaanaal imai illai Vasanthangal varum munbae veyil vanthathae Mazhaikaala megangal kalaigindrathey Aaaaa…..aaa…..aaa……aaa…..aaa…….ooo…..
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே மழைக்கால மேகங்கள் கலைகின்றதே வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே மழைக்கால மேகங்கள் கலைகின்றதே பொன்னானாள் விலை இல்லை கண்ணானாள் இமை இல்லை பெண் : இலை உண்டு மலர் உண்டு கனி இல்லையே கனி ஒன்று கை வந்தும் கிளியில்லையே அவள் வீணை தரும் பாடல் ஒரே ராகமே ஆனந்தம் அதில் இல்லை ஒரே சோகமே பெண் : பொன்னானாள் விலை இல்லை கண்ணானாள் இமை இல்லை பெண் : கவி ஒன்று வருமென்று ஏடானவள் சில நாளில் வெறும் தாளில் கோடானவள் பனிக் காலம் குயில் பாட கூடானவள் படிக்காமல் முடிகின்ற பாட்டானவள் பெண் : பொன்னானாள் விலை இல்லை கண்ணானாள் இமை இல்லை பெண் : மணச் சின்னம் கழுத்தோடு சிரிக்கின்றதே மலர்க் கிண்ணம் நெருப்பாக கொதிக்கின்றதே நினைக்கின்ற மனம் மட்டும் நினைக்கின்றதே தடுக்கின்ற விதி ஏதோ தடுக்கின்றதே பெண் : பொன்னானாள் விலை இல்லை கண்ணானாள் இமை இல்லை வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே மழைக்கால மேகங்கள் கலைகின்றதே ஆஆஆ….ஆஆ……ஆஆ…..ஆஆ….ஆஆஆ…ஓஓஒ…