← Back

Inba Ulagankalin Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male : Ingae ingae ingae Inba ulagangalin ellai ingae Iravil malarnthirukkum mullai ingae Iniya mozhi pesum kilai ingae Inimai inimai adhu kollai ingae Chorus : Ingae ingae ingae Female : Singa kural konda kalaingan ingae Raja nadai podum maravan ingae Singa kural konda kalaingan ingae Raja nadai podum maravan ingae Navarasa baavanai nadigan ingae Nalla manidhargalil oruvan ingae Haaa..aaa..aaa.aaa…(2) Male : Inba ulagangalin ellai ingae Iravil malarnthirukkum mullai ingae Iniya mozhi pesum kilai ingae Inimai inimai adhu kollai ingae Chorus : Ingae ingae ingae Chorus : Humming …… Female : Manjalvanna maangani Minnalidai mogini Muthumozhi paingili Thathi varum poongodi Aadum unnodu than Aadum unnodu than Male : Kanni ennum thamarai Kannamadhil thaen mazhai Chinnanjiru punnagai sindhugindra menagai Paadum pannoduthaan Female : Unnai azhaithathu aasai nenjam Thannai maranthathu kodhai konjam Male : Nalla ilamaiyin vegam ingae Ulla veeniayin raagam angae Chorus : Ingae ingae ingae Female : Mottuvitta malligai Thottuvitta kannigai Kitta vandha thendralai Etti etti sendrathu Yekkam ennavavadhu Yekkam ennavavadhu Male : Ththai pettra pillaiyoo Alla alla kanmani Methai ida solavdho Ennai indha ponmani Mogam polladhadhu Female : Manjam pirandhadhu needhan konja Naanam pirandhadhu naan dhaan kenja Male : Kanni malarukku naana thendral Manjal nilavukku naana megam Chorus : Ingae ingae ingae Male : Inba ulagangalin ellai ingae Iravil malarnthirukkum mullai ingae Iniya mozhi pesum kilai ingae Inimai inimai adhu kollai ingae Chorus : Ingae ingae ingae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : இங்கே இங்கே இங்கே… இன்ப உலகங்களின் எல்லை இங்கே இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே இனிமை இனிமை அது கொள்ளை இங்கே… குழு : இங்கே இங்கே இங்கே… பெண் : சிங்கக் குரல் கொண்ட கலைஞன் இங்கே ராஜ நடை போடும் மறவன் இங்கே சிங்கக் குரல் கொண்ட கலைஞன் இங்கே ராஜ நடை போடும் மறவன் இங்கே நவரச பாவனை நடிகன் இங்கே நல்ல மனிதர்களில் ஒருவன் இங்கே….. ஹா..ஆஅ..ஆஅ..ஆ…(2) ஆண் : இன்ப உலகங்களின் எல்லை இங்கே இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே இனிமை இனிமை அது கொள்ளை இங்கே… குழு : இங்கே இங்கே இங்கே… குழு : முனங்கல்……. பெண் : மஞ்சள் வண்ண மாங்கனி மின்னலிடை மோகினி முத்து மொழி பைங்கிளி தத்தி வரும் பூங்கொடி ஆடும் உன்னோடுதான்……. ஆடும் உன்னோடுதான் ஆண் : கன்னி என்னும் தாமரை கன்னமதில் தேன் மழை சின்னஞ்சிறு புன்னகை சிந்துகின்ற மேனகை பாடும் பண்ணோடுதான்…. பெண் : உன்னை அழைத்தது ஆசை நெஞ்சம் தன்னை மறந்தது கோதை கொஞ்சம் ஆண் : நல்ல இளமையின் வேகம் இங்கே உள்ள வீணையின் ராகம் அங்கே…… குழு : இங்கே…….இங்கே……..இங்கே…….. பெண் : மொட்டுவிட்ட மல்லிகை தொட்டுவிட்ட கன்னிகை கிட்ட வந்த தென்றலை எட்டி எட்டி சென்றது ஏக்கம் என்னாவது…… ஏக்கம் என்னாவது ஆண் : தத்தை பெற்ற பிள்ளையோ அல்ல அல்ல கண்மணி மெத்தை இட சொல்வதோ என்னை இந்த பொன்மணி மோகம் பொல்லாதது பெண் : மஞ்சம் பிறந்தது நீதான் கொஞ்ச நாணம் பிறந்தது நான்தான் கொஞ்ச ஆண் : கன்னி மலருக்கு நானா தென்றல் மஞ்சள் நிலவுக்கு நானா மேகம் குழு : இங்கே………இங்கே…….இங்கே…. ஆண் : இன்ப உலகங்களின் எல்லை இங்கே இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே இனிமை இனிமை அது கொள்ளை இங்கே… குழு : இங்கே இங்கே இங்கே…