← Back

Koonthalukku Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Koondhalukku malar koduthaal Kulir mugathil thilagam ittaal Kodutha malar vaadumunnae Konda malar vaadudhaiyaa Male : Koondhalukku malar koduthaal Kulir mugathil thilagam ittaal Kodutha malar vaadumunnae Konda malar vaadudhaiyaa Male : Kulirndha neeril kulirthaalum Gunamum kooda kulippadhillai Kumbidum dheivam munnirundhaalum Idhayam edhaiyum marappadhillai Male : Aadaiyinaal udal maraithaalum Aasaigal maraivadhillai Arubadhu vayadhai irubadhu vayadhil Yaarumae adaivadhillai Yaarumae adaivadhillai Male : Koondhalukku malar koduthaal Kulir mugathil thilagam ittaal Kodutha malar vaadumunnae Konda malar vaadudhaiyaa Male : Kangal irundhum kaatchi illaamal Kalangi vaadum uyir ingae Porul kaiyilirundhum pasi ariyaamal Kadhari azhum uyir angae Male : Sondham irundhum thunai seraamal Thudi thudikkum uyir ingae Thunaiyaai irukka vazhi irundhum Thuvaludhae uyir angae Thuvaludhae uyir angae Male : Patta maramae… Pazhudhadaindha oviyamae Kattiyadhor thaaliyindri Kaarigaikku thandhadhenna Male : Anaikkaadha karangalukku thunai edharkku Arundhaadha mudavanukku paal edharkku Suvaikkaadha marakkilaikku vaai edharkku Sugam theriyaa kurudanukku vaazhvedharkku..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கூந்தலுக்கு மலர் கொடுத்தாள் குளிர் முகத்தில் திலகமிட்டாள் கொடுத்த மலர் வாடுமுன்னே கொண்ட மலர் வாடுதையா ஆண் : கூந்தலுக்கு மலர் கொடுத்தாள் குளிர் முகத்தில் திலகமிட்டாள் கொடுத்த மலர் வாடுமுன்னே கொண்ட மலர் வாடுதையா ஆண் : குளிர்ந்த நீரில் குளித்தாலும் குணமும் கூடக் குளிப்பதில்லை கும்பிடும் தெய்வம் முன்னிருந்தாலும் இதயம் எதையும் மறப்பதில்லை ஆண் : ஆடையினால் உடல் மறைத்தாலும் ஆசைகள் மறைவதில்லை அறுபது வயதை இருபது வயதில் யாருமே அடைவதில்லை யாருமே அடைவதில்லை ஆண் : கூந்தலுக்கு மலர் கொடுத்தாள் குளிர் முகத்தில் திலகமிட்டாள் கொடுத்த மலர் வாடுமுன்னே கொண்ட மலர் வாடுதையா ஆண் : கண்களிருந்தும் காட்சியில்லாமல் கலங்கி வாடும் உயிரிங்கே பொருள் கையிலிருந்தும் பசியறியாமல் கதறியழும் உயிர் அங்கே ஆண் : சொந்தமிருந்து துணை சேராமல் துடிதுடிக்கும் உயிர் இங்கே துணையாய் இருக்க வழி இருந்தும் துவளுதே உயிர் அங்கே துவளுதே உயிர் அங்கே ஆண் : பட்ட மரமே……. பழுதடைந்த ஓவியமே கட்டியதோர் தாலியின்றி காரிகைக்குத் தந்ததென்ன ஆண் : அணைக்காத கரங்களுக்குத் துணை எதற்கு அருந்தாத முடவனுக்குப் பால் எதற்கு சுவைக்காக மரக்கிளைக்கு வாய் எதற்கு சுகம் தெரியாக் குருடனுக்கு வாழ்வெதற்கு