← Back

Yaen Endral Un Piranthanaal Song Lyrics

Singers : Hariharan, Maalavika Manoj and Vishnu Priya Music by : Siddharth Vipin Male : Yen endraal un piranthanaal Male : …………………………………. Male : Uzhaga pookalin vaasam unaku sirai pidipen Ularntha megathai kondu nilavin karai thudaipen Male & Female : { Yen endraal un piranthanaal } (2) Male : …………………………………. Male : Ilai ondril medai amaithu olivaangi kaiyil koduthu Paravaigalai paada seiven ilai ellam kaigal thatta Adhil vellum paravai ondrai un kaathil koova seiven Un araiyil koodu kattida kattalai iduven Adhikaalai unnai ezhupida utharavu iduven Male : Yen endraal Female : Yen endraal Un piranthanaal Yen endraal un piranthanaal Male : Malai utchi etti pani katti vetti Un kuliyal thottiyil kotti Sooriyanai vadi katti Pani ellam othukiduven Male : Unnai athil kulikathaan Idham paarthu erakiduven ya ya ya Kanillaa pen meengal pidithu oh oh oh Unnodu naan neentha viduven oh Male : Nee kulithu mudithu thuvatathaan En kaadhal madithu thandhiduven Male & Female : { Yen endraal un piranthanaal } (2) Male : Nenjathai vethupagam aaki Anichal seithiduven Melugupookalin malae en Kaadhal yetriduven Male : Nee oothinaal anaiyaathadi Nee vettavae mudiyaathadi Un kangalai nee moodadi Enna vendumo athai keladi Male : Yen endraal un piranthanaal Male & Female : Yen endraal un piranthanaal Male : …………………… Female : ……………………….
பாடகிகள் : மாளவிகா மனோஜ், விஷ்ணு பிரியா பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : சித்தார்த் விபின் ஆண் : ஏன் என்றால் உன் பிறந்தநாள் ஆண் : ……………………….. ஆண் : உலகப் பூக்களின் வாசம் உனக்குச் சிறை பிடிப்பேன் உலர்ந்த மேகத்தைக் கொண்டு நிலவின் கறை துடைப்பேன் ஆண் & பெண் : { ஏன் என்றால் உன் பிறந்தநாள் } (2) ஆண் : ……………………….. ஆண் : இலை ஒன்றில் மேடை அமைத்து ஒலி வாங்கி கையில் கொடுத்து பறவைகளை பாடச் செய்வேன் இலை எல்லாம் கைகள் தட்ட அதில் வெல்லும் பறவை ஒன்றை உன் காதில் கூவச் செய்வேன் உன் அறையில் கூடு கட்டிட கட்டளையிடுவேன் அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவு இடுவேன் ஆண் : ஏன் என்றால் பெண் : ஏன் என்றால் உன் பிறந்தநாள் ஏன் என்றால் உன் பிறந்தநாள் ஆண் : மலையுச்சி எட்டி பனிக்கட்டி வெட்டி உன் குளியல் தொட்டியில் கொட்டி சூரியனை வடிகட்டி பனி எல்லாம் ஒதுக்கிடுவேன் ஆண் : உன்னை அதில் குளிக்கத்தான் இதம் பார்த்து இறக்கிடுவேன் யா யா யா கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து ஓ ஓ ஓ உன்னோடு நான் நீந்த விடுவேன் ஓ ஆண் : நீ குளித்து முடித்து துவட்டத்தான் என் காதல் மடித்துத் தந்திடுவேன் ஆண் & பெண் : { ஏன் என்றால் உன் பிறந்தநாள் } (2) ஆண் : நெஞ்சத்தை வெதுப்பகமாக்கி அணிச்சல் செய்திடுவேன் மெழுகுப் பூக்களின் மேலே என் காதல் ஏற்றிடுவேன் ஆண் : நீ ஊதினால் அணையாதடி நீ வெட்டவே முடியாதடி உன் கண்களை நீ மூடடி என்ன வேண்டுமோ அதைக் கேளடி ஆண் : ஏன் என்றால் உன் பிறந்தநாள் ஆண் & பெண் : ஏன் என்றால் உன் பிறந்தநாள் ஆண் : ……………………….. பெண் : ………………………..