← Back

Adhu Adhu Adhu Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : N. S. Thiyagarajan Lyrics by : Kannadasan Male : Adhu adhu adhu Adhuvaagaadhilae adanguthamma Female : Edhu edhu edhu Edhuvaaga edhilae adanguthaiyaa Male : Pullai thadavi varum thendral Mana poottai thirandhu vaikkum kangal Ellai kadanthu vitta ullam Adhil ennai kulikka veitha vellam Female : Nenjil maraithu vaitha thittam Kannil neendhi paranthu varum pattam Manjal nilavil oru kattam Adhu maaya kalai payilum vattam Male : Adhu adhu adhu Adhuvaagaadhilae adanguthamma Female : Edhu edhu edhu Edhuvaaga edhilae adanguthaiyaa Male : Aadi kulungi varum pandhu Adhu paadi kondae irukkum sindhu Female : Thevai nadatha varum sittu Adhu thaenai sumandhu varum mottu Male : Moodi marainthirukkum senu Adhan munnal irukkum oru vandu Female : Aadai mundhaanai adhil pattu Ammamma nadungum udarkattu Male : Adhu adhu adhu Adhuvaagaadhilae adanguthamma Female : Edhu edhu edhu Edhuvaaga edhilae adanguthaiyaa Humming : ………. Male : Udhadugal sembavala petti Adhil oori kidakkum vellakatti Oru tharam kaigalukku katti Adhai undaal mayangum thalai suthi Female : Kannikku maeni oru azhagu Aval kaadhal vilundha meluga Enna kuraindhu vidum pazhagu Ini endrum nilaikkum indha uravu Male : Adhu adhu adhu Adhuvaagaadhilae adanguthamma Female : Edhu edhu edhu Edhuvaaga edhilae adanguthaiyaa Humming : ……….
பாடகர்கள் : டி. எம் . சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : அது அது அது அதுவாக அதிலே அடங்குதம்மா எது எது எது எதுவாக எதிலே அடங்குதய்யா ஆண் : புல்லை தடவி வரும் தென்றல் மனப் பூட்டை திறந்து வைக்கும் கண்கள் எல்லைக் கடந்து விட்ட உள்ளம் அதில் என்னைக் குளிக்க வைத்த வெள்ளம் பெண் : நெஞ்சில் மறைத்து வைத்த திட்டம் கண்ணில் நீந்தி பறந்து வரும் பட்டம் மஞ்சள் நிலவில் ஒரு கட்டம் அது மாயக் கலைப் பயிலும் வட்டம்.. ஆண் : அது அது அது அதுவாக அதிலே அடங்குதம்மா பெண் : எது எது எது எதுவாக எதிலே அடங்குதய்யா ஆண் : ஆடிக் குலுங்கி வரும் பந்து அது பாடிக் கொண்டே இருக்கும் சிந்து பெண் : தேவை நடத்த வரும் சிட்டு அது தேனை சுமந்து வரும் மொட்டு ஆண் : மூடி மறைத்திருக்கும் செண்டு அதன் முன்னால் இருக்கும் ஒரு வண்டு பெண் : ஆடை முந்தானை அதில் பட்டு அம்மம்மா நடுங்கும் உடற்கட்டு ஆண் : அது அது அது அதுவாக அதிலே அடங்குதம்மா பெண் : எது எது எது எதுவாக எதிலே அடங்குதய்யா முனகல் : …………… ஆண் : உதடுகள் செம்பவழப் பெட்டி அதில் ஊறிக் கிடக்கும் வெல்லக்கட்டி ஒரு தரம் கைகளுக்குள் கட்டி அதை உண்டால் மயங்கும் தலை சுத்தி பெண் : கன்னிக்கு மேனி ஒரு அழகு அவள் காதல் அதில் விழுந்த மெழுகு என்ன குறைந்து விடும் பழகு இனி என்றும் நிலைக்கும் இந்த உறவு….. ஆண் : அது அது அது அதுவாக அதிலே அடங்குதம்மா பெண் : எது எது எது எதுவாக எதிலே அடங்குதய்யா முனகல் : ………………