← Back

Kaatre Poongatre Song Lyrics

Singer : K.S. Chithra Music by : S.A. Rajkumar Female : ………………………………………………. Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa Vinnil sellathaan un siragugal tharuvayaa Thendralaai varukiren pookalaai pookavaa Vaarthaiyaai varugiren paadalaai paadavaa Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa Vinnil sellathaan un siragugal tharuvayaa Female : ………………………………………… Female : Nathi enbadhu oar naal kadalenbathai serum Eppodhumae odum nadhiyaagalaam Roja chedi polae nee pookalaam ingae Kaatrodu poraadum gunam vendumae Female : Ada ullangaiyaal sooriyanai moodida mudiyaadhae Oru paravai modhi gopuram dhaan saaindhida koodadhae Thozhanae thozhanae oviyan kai vali sithiram aaguthu Ovvoru valiyilum saadhanai ulladhu Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa Vinnil sellathaan un siragugal tharuvayaa Female : Puyal veesumae endru karai oramaai nindru Anai kattinaal adhu oivadhillai Chorus : ……………… Mazhai thoorumae endru naduvaanilae vandhu Thirai kattinaal mazhai mudivadhillai Female : Eri malaiyin melae thanneer ootri anaithida mudiyaadhu Oru minnal keetrai noolil katti niruthida iyalaadhu Unnai yaar velvadhu sipiyin porumai dhaan muthu pol minnudhu Ilaigalin sakthi dhaan kanigalai thaangudhu Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa Vinnil sellathaan un siragugal tharuvayaa Thendralaai varukiren pookalaai pookavaa Vaarthaiyaai varugiren paadalaai paadavaa Female : …………………………………………………….
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : ……………………… பெண் : காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா பெண் : காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா பெண் : ……………………… பெண் : நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும் எப்போதுமே ஓடும் நதியாகலாம் ரோஜா செடி போலே நீ பூக்கலாம் இங்கே காற்றோடு போராடும் குணம் வேண்டுமே பெண் : அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே ஒரு பறவை மோதி கோபுரம் தான் சாய்ந்திட கூடாதே தோழனே தோழனே ஓவியன் கை வலி சித்திரம் ஆகுது ஒவ்வொரு வழியிலும் சாதனை உள்ளது பெண் : காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா பெண் : புயல் வீசுமே என்று கரை ஓரமாய் நின்று அணை கட்டினால் அது ஓய்வதில்லை குழு : ……………………….. பெண் : மழை தூறுமே என்று நடுவானிலே வந்து திரை கட்டினால் மழை முடிவதில்லை பெண் : எாி மலையின் மேலே தண்ணீர் ஊற்றி அணைத்திட முடியாது ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுத்திட இயலாது உன்னை யார் வெல்வது சிப்பியின் பொறுமை தான் முத்து போல் மின்னுது இலைகளின் சக்தி தான் கனிகளை தாங்குது பெண் : காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா பெண் : ………………………