← Back

Vanakkiliye Vanakkiliye Song Lyrics

Singer : S. Janaki Music by : Deva Female : Vanakkiliyae…. Vanakkiliyae nanthavana kiliyae Chorus : Maarkazhi madham mun pani kaalam Veesidum poongaatrae Moongilil meedhu modhidum podhu Kettidum thaen paattae Female : Kaalaiyil adhikaalaiyil Maalaiyil malar cholaiyil Ennaththaan mellaththaan Ennaiththaan anaiththaan Female : Vanakkiliyae nanthavana kiliyae Vanakkiliyae nanthavana kiliyae Female : Chinna kannan unnai paarththu Thogai mayil aaduthu Kanni enthan nenjam naalum Unnai enni vaaduthu Chorus : Jamjam jajam jam Female : Oo….pul veliyil meththaiyittu Moodu pani thoonguthu Raasaa magan tholil vanna Rosaa onnum saayuthu Female : Yaeriyil…. Chorus : Oo…oo…. Female : Yaeriyin karai ooramae Naaraigal konjum neramae Ennaththaan mellaththaan Ennaiththaan anaiththaan Chorus : Vaadaiyil Aadum jaadaiyil paadum Vaasanai poochendu Female : Oo…ooo… Chorus : Aarambamaagum Aanantha raagam vaazhiya pallaandu Female : Vanakkiliyae…..ae… Chorus : Endrum ilam kadhal manam vaazhum Female : Vanakkiliyae…..ae… Chorus : Sangath tamil unthan pugazh paadum Chorus : ……………. Female : …………….. Female : Dhesam vittu dhesam vantha Thanneer mazhaai megamae Dhekku mara kaattilthaan Thooral vizhum neramae…. Chorus : Jamjam jajam jam Female : Oo….velli mazhai saaral paattu Vaadum intha thegamae Vanji magal thegamellam Unnudaiya mogamae Female : Neeralai Chorus : Oo….ooo….. Female : Neeralai vanthu paainthida Naanalum thalai saainthida Ennaththaan mellaththaan Ennaiththaan anaiththaan Chorus : Anbe unthan perazhkellam Ajanthaavin ooviyam Ingae sinthum vaaimozhi ellam Elangovin kaaviyam Female : Oo….ooo….. Female : Vanakkiliyae…..ae… Chorus : Endrum ilam kadhal manam vaazhum Female : Vanakkiliyae…..ae… Chorus : Sangath tamil unthan pugazh padum
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா பெண் : வனக்கிளியே…….. வனக்கிளியே நந்தவனக் கிளியே குழு : மார்கழி மாதம் முன் பனிக் காலம் வீசிடும் பூங்காற்றே மூங்கிலில் மீது மோதிடும் போது கேட்டிடும் தேன் பாட்டே பெண் : காலையில் அதிகாலையில் மாலையில் மலர்ச்சோலையில் என்னத்தான் மெல்லத்தான் என்னைத்தான் அணைத்தான் பெண் : வனக் கிளியே நந்தவனக் கிளியே வனக் கிளியே நந்தவனக் கிளியே…. பெண் : சின்னக் கண்ணன் உன்னைப் பார்த்து தோகை மயில் ஆடுது கன்னி எந்தன் நெஞ்சம் நாளும் உன்னை எண்ணி வாடுது குழு : ஜம்ஜம் ஜஜம் ஜம் பெண் : ஓ….புல்வெளியில் மெத்தையிட்டு மூடு பனி தூங்குது ராசா மகன் தோளில் வண்ண ரோசா ஒண்ணும் சாயுது பெண் : ஏரியில்…… குழு : ஓ……ஓஓ…. பெண் : ஏரியின் கரை ஓரமே நாரைகள் கொஞ்சும் நேரமே என்னத்தான் மெல்லத்தான் என்னைத்தான் அணைத்தான் குழு : வாடையில் ஆடும் ஜாடையில் பாடும் வாசனை பூச்செண்டு…… பெண் : ஓ……ஓஓ…. குழு : ஆரம்பமாகும் ஆனந்த ராகம் வாழிய பல்லாண்டு பெண் : வனக்கிளியே……ஏ…. குழு : என்றும் இளம் காதல் மனம் வாழும் பெண் : வனக்கிளியே……ஏ…. குழு : சங்கத் தமிழ் உந்தன் புகழ் பாடும் குழு : ……………………. பெண் : …………………. பெண் : தேசம் விட்டு தேசம் வந்த தண்ணீர் மழை மேகமே தேக்கு மரக் காட்டில் தான் தூறல் விழும் நேரமே….. குழு : ஜம்ஜம் ஜஜம் ஜம் பெண் : ஓ……வெள்ளி மழைச்சாரல் பட்டு வாடும் இந்த தேகமே வஞ்சி மகள் தேகமெல்லாம் உன்னுடைய மோகமே பெண் : நீரலை….. குழு : ஓ……ஓஓ…. பெண் : நீரலை வந்து பாய்ந்திட நாணலும் தலை சாய்ந்திட என்னத்தான் மெல்லத்தான் என்னைத்தான் அணைத்தான்.. குழு : அன்பே உந்தன் பேரழகெல்லாம் அஜந்தாவின் ஓவியம் இங்கே சிந்தும் வாய்மொழி எல்லாம் இளங்கோவின் காவியம்…… பெண் : ஓ……ஓஓ…. பெண் : வனக்கிளியே….ஏ…. குழு : என்றும் இளம் காதல் மனம் வாழும் பெண் : வனக்கிளியே….ஏ…. குழு : சங்கத் தமிழ் உந்தன் புகழ் பாடும்