← Back

Vaadipatti Sandhaiyile Song Lyrics

Singers : T. K. S. Nadarajan and Chaya Music by : Rajesh Khanna Male : Vaadipatti sandhaiyilae vanginen rendu kaala maadu Yerapotta pogaiyilae otha matta kaanalaiyae Adi ennadi naan seiven edha nenachu azhuven Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam Female : Manasa vittudadha machaan maadu ponaa pogattum Mavaraasa nee irundha maadu nooru vaangikalaam Enna paaru maama nee idhukku azhuvalaama Nugathadiya naan pudichaa yeru uzhu maama Male : Kaanju kedakkuthadi vayalu karuvaada pochuthadi Penja mazhai ellam indha boomikkae sariyaachudhadi Adi ennadi naan seiven edha nenachu azhuven Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam Female : Oothukkaeni thondikuvom machaan Oorum thanniya yerachukkuvom Paathi katti machaan naama Payiru senju pozhachikkuvom Enna paaru maama nee idhukku azhuvazhaamaa Yer ikku kaiyirukku veredhukku bayam unakku Male : Vayasu vandha ponna pola Valarndhu irukku payira ippo Vayadhaana kilavan thalapola veluthu thaanae poiyiduchu Adi ennadi naan seiven edha nenachu azhuven Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam Female : Samanju irukkum ponnu kooda sadhai pudikka naalum aagum Thoothi adichaa payiru machaan marundhu vacha seriya pogum Enna paaru maama nee idhukku azhuvazhaamaa Marundhu vaangu maamaa adha serndhadippom naama Male : Arukka aalu kidaikaladi pulla adichu thootha edamilladi Surukka mudichaathaanae townukku kondu poga thunai illaiyae Adi ennadi naan seiven edha nenachu azhuven Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam Female : Veveramaana aalu machaan Neeyum vekkanketta aalu machaan Ada chee poo machaan Veveramaana aalu machaan neeyum Vekkanketta aalu machaan Surukka thaanae parisam potta Indha sirukki un kooda varuvaa Both : Thannanathaana thana thaananaananan naana….(4)
பாடகர்கள் : டி. கே. எஸ். நடராஜன் மற்றும் சாயா இசை அமைப்பாளர் : ராஜேஷ் கன்னா ஆண் : வாடிப்பட்டி சந்தையிலே வாங்கினேன் ரெண்டு காள மாடு ஏரப் பூட்ட போகையிலே ஒத்த மாட்ட காணலையே அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன் தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம் பெண் : மனச விட்டுடாதே மச்சான் மாடு போனா போகட்டுமே மவராசா நீயிருந்தா மாடு நூறு வாங்கிக்கலாம் என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா நுகத்தடிய நான் புடிச்சா ஏர உழு மாமா ஆண் : காஞ்சு கெடக்குதடி வயலு கருவாடா போச்சுதடி பேஞ்ச மழை எல்லாம் இந்த பூமிக்கே சரியாச்சுதடி அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன் தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம் பெண் : ஊத்துக் கேணி தோண்டிக்குவோம் மச்சான் ஊறும் தண்ணிய எறச்சுக்குவோம் பாத்தி கட்டி மச்சான் நாம பயிரு செஞ்சு பொழைச்சுக்குவோம் என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா ஏரிருக்கு கையிருக்கு வேறெதுக்கு பயம் உனக்கு ஆண் : வயசு வந்த பொண்ணப் போல வளர்ந்து இருக்கு பயிரு இப்போ வயதான கெழவன் தலப்போல வெளுத்து தானே போயிடுச்சு அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன் தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம் பெண் : சமஞ்சு இருக்கும் பொண்ணு கூட சதை புடிக்க நாளும் ஆகும் தூத்தி அடிச்சா பயிரு மச்சான் மருந்து வச்சா சரியா போகும் என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா மருந்த வாங்கு மாமா அதை சேர்ந்தடிப்போம் நாம ஆண் : அறுக்க ஆளு கெடைக்கலடி புள்ள அடிச்சு தூத்த எடமில்லடி சுருக்கா முடிச்சுத்தானே டவுனுக்கு கொண்டு போக துணையில்லையே அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன் தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம் பெண் : வெவரமான ஆளு மச்சான் நீயும் வெக்கங்கெட்ட ஆளு மச்சான் வெவரமான ஆளு மச்சான் நீயும் வெக்கங்கெட்ட ஆளு மச்சான் சுருக்காத்தானே பரிசம் போட்டா இந்த சிறுக்கி உனக்கு கூட வருவா இருவர் : தன்னானதானா தனதானானன்னனானா தன்னானதானா தனதானானன்னனானா தன்னானதானா தனதானானன்னனானா….