← Back

Mann Kodatha Somandhu Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jayaram Music by : K. V. Mahadevan Lyrics by : Vairamuthu Male : {Mann kodatha somandhu kittu Mayilattam poravalae Oththasai seiyattuma Naan un kodutha somakkattumae} (2) Female : {Mann kodatha ketkkuriya Sangadatha solluriya Pon kodutha koduthaalum Naan en kodatha tharamatten} (2) Female : {Kurukku siruthavarae koothadi mannavarae Kirukku pudichavarae kinnaram padichavarae} (2) Sarakku omakirukka andha sandhegam enakkirukku Male : {Yaarum ketkaadha kelviyadi Nee kitta vandha theriyumadi} (2) Idhu kaangaeyum kaalaiyadi kattaana thegamadi Maalaiyitta marunaalae unakku masakka undagumadi Male : Mann kodutha somandhu kittu Mayilattam poravalae Female : Nee ponn kodatha koduthaalum Naan en kodatha tharamatten Male : Kezhakku veluthathenna angae Keezhvanam sevandhadhenna Marikolundhu sedi melae Adiyae maanga pazhuthadhenna Etti parikkaiyilae adhu etti etti povadhenna Female : {Oorellaam kaathirukka Naan unakkaaga kutha vechen} (2) Thoongadha maanganiyai thuni pottu pothi vechen Eriyadha en aduppa perumoochil patha vechen Female : Mann kodatha Ketkkuriya Sangadatha solluriya Male : Oththasai seiyattuma Naan un kodutha somakkattuma Female : Pon kodutha koduthaalum Naan en kodatha tharamatten
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : {மண் கொடத்த சொமந்து கிட்டு மயிலாட்டம் போறவளே ஒத்தாசை செய்யட்டுமா நான் உன் கொடத்த சொமக்கட்டுமா} ( 2 ) பெண் : {மண் கொடத்த கேட்கிறியா சங்கடத்த சொல்லுறியா பொன் கொடத்த கொடுத்தாலும் நான் என் கொடத்த தரமாட்டேன்} ( 2 ) பெண் : {குறுக்கு சிறுத்தவரே கூத்தாடி மன்னவரே கிறுக்கு புடிச்சவரே கிண்ணாரம் படிச்சவரே} ( 2 ) சரக்கு ஒமக்கிருக்கா அந்த சந்தேகம் எனக்கிருக்கு ஆண் : {யாரும் கேட்காத கேள்வியடி நீ கிட்ட வந்தா தெரியுமடி} ( 2 ) இது காங்கேயம் காளையடி கட்டான தேகமடி மாலையிட்ட மறுநாளே உனக்கு மசக்க உண்டாகுமடி ஆண் : மண் கொடத்த சொமந்து கிட்டு மயிலாட்டம் போறவளே பெண் : நீ பொன் கொடத்த கொடுத்தாலும் நான் என் கொடத்த தரமாட்டேன் ஆண் : கெழக்கு வெளுத்ததென்ன அங்கே கீழ்வானம் செவந்ததென்ன மரிக்கொழுந்து செடி மேலே அடியே மாங்கா பழுத்ததென்ன எட்டிப் பறிக்கையிலே அது எட்டி எட்டி போவதென்ன பெண் : {ஊரெல்லாம் காத்திருக்க நான் உனக்காக குத்த வச்சேன்} ( 2 ) தூங்காத மாங்கனியை துணிப் போட்டு பொத்தி வச்சேன் எரியாத என் அடுப்ப பெருமூச்சில் பத்த வச்சேன் பெண் : மண் கொடத்த கேட்கிறியா சங்கடத்த சொல்லுறியா ஆண் : நான் ஒத்தாசை செய்யட்டுமா உன் கொடத்த சொமக்கட்டுமா பெண் : நீ பொன் கொடத்த கொடுத்தாலும் நான் என் கொடத்த தரமாட்டேன்….