← Back

Jingu Jingunnu Song Lyrics

Jingu Jingunnu Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu, Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Ka. Mu. Sherif”. Singer : P. Susheela Music by : S. Rajeswararao Lyrics by : Ka. Mu. Sherif Female : Jingu jingunnu jingu jingunnu Thulliyae odungalaen oo…oo… Senthamizh naattin selvangalae Vaayillaatha nalla jeevangalae Female : Jingu jingunnu jingu jingunnu Thulliyae odungalaen oo…oo… Female : Vellai sivappu vanna niraththil Minnum azhagiya kaalaigalaai Kirukiruvendru ongi valarnthu Vayalgalai neengal uzhuvatheppo Female : Allalil sikkiya namma kudumbam Aanantha vaazhvu peruvathu eppo Oo…oo….oo…oo….oo…oo…oo…oo… Female : Allalil sikkiya namma kudumbam Aanantha vaazhvu peruvathu eppo Aasai kondumae valarththidum engalin Kashtaththai neengal theerppathu eppo…. Female : Jingu jingunnu Thulliyae odungalaen Female : Laddu jelaebiyum kettumae neengal Naalumae thollai tharuvathillai Pattu thalaigaani meththaiyum pottu Paduththida neengal ninaippathillai Female : Oru pidi vaikkolum Oru vaai thanneerum Koduththaalae thirupthiyaa uzhaippeenga neenga Nenjil eeramillaa manidar kaattilum Ulagilae neengalae melaagum Female : Jingu jingunnu Thulliyae odungalaen Female : Pagalendrummillae iravendrumillae Paadupettumae uzhaippeenga Nambi valarththidum ejamaanidaththil Nandri kaattiyae nadappeenga Female : Pathavi pattamae ketkkaamalae Intha bharatham vaazha uzhaippavar neenga Pathavi pattamae ketkkaamalae Intha bharatham vaazha uzhaippavar neenga Mannilae ungalin uzhaippinai vittaa Maanidar vaazhnthida vazhiyae illai Female : Jingu jingunnu jingu jingunnu Thulliyae odungalaen oo…oo… Senthamizh naattin selvangalae Vaayillaatha nalla jeevangalae Female : Jingu jingunnu jingu jingunnu Thulliyae odungalaen
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : க. மு. ஷெரிப் பெண் : ஜிங்கு ஜிங்குன்னு ஜிங்கு ஜிங்குன்னு துள்ளியே ஒடுங்களேன் ஓ…ஓ.. செந்தமிழ் நாட்டின் செல்வங்களே வாயில்லாத நல்ல ஜீவன்களே….. பெண் : ஜிங்கு ஜிங்குன்னு ஜிங்கு ஜிங்குன்னு துள்ளியே ஒடுங்களேன் ஓ…ஓ.. பெண் : வெள்ளை சிவப்பு வண்ண நிறத்தில் மின்னும் அழகிய காளைகளாய் கிறுகிறுவென்று ஓங்கி வளர்ந்து வயல்களை நீங்கள் உழுவதெப்போ பெண் : அல்லலில் சிக்கிய நம்ம குடும்பம் ஆனந்த வாழ்வு பெறுவது எப்போ ஓ……ஓ……ஓ……ஓ……ஓ……ஓ……ஓ……ஓ…… பெண் : அல்லலில் சிக்கிய நம்ம குடும்பம் ஆனந்த வாழ்வு பெறுவது எப்போ ஆசை கொண்டுமே வளர்த்திடும் எங்களின் கஷ்டத்தை நீங்கள் தீர்ப்பது எப்போ…… பெண் : ஜிங்கு ஜிங்குன்னு துள்ளியே ஒடுங்களேன் பெண் : லட்டு ஜிலேபியும் கேட்டுமே நீங்கள் நாளுமே தொல்லை தருவதில்லை பட்டு தலைகாணி மெத்தையும் போட்டு படுத்திட நீங்கள் நினைப்பதில்லை பெண் : ஒரு பிடி வைக்கோலும் ஒரு வாய் தண்ணீரும் கொடுத்தாலே திருப்தியா உழைப்பீங்க நீங்க நெஞ்சில் ஈரமில்லா மானிடர் காட்டிலும் உலகிலே நீங்களே மேலாகும்… பெண் : ஜிங்கு ஜிங்குன்னு துள்ளியே ஒடுங்களேன் பெண் : பகலென்றுமில்லே இரவென்றுமில்லே பாடுபட்டுமே உழைப்பீங்க நம்பி வளர்த்திடும் எஜமானிடத்தில் நன்றி காட்டியே நடப்பீங்க பெண் : பதவி பட்டமே கேட்காமலே இந்த பாரதம் வாழ உழைப்பவர் நீங்க பதவி பட்டமே கேட்காமலே இந்த பாரதம் வாழ உழைப்பவர் நீங்க மண்ணிலே உங்களின் உழைப்பினை விட்டா மானிடர் வாழ்ந்திட வழியே இல்லை…. பெண் : ஜிங்கு ஜிங்குன்னு ஜிங்கு ஜிங்குன்னு துள்ளியே ஒடுங்களேன் ஓ…ஓ.. செந்தமிழ் நாட்டின் செல்வங்களே வாயில்லாத நல்ல ஜீவன்களே….. பெண் : ஜிங்கு ஜிங்குன்னு ஜிங்கு ஜிங்குன்னு துள்ளியே ஒடுங்களேன்