← Back

Thalaiye Nee Vanangaai Song Lyrics

Singer : Soolamangalam Rajalakshmi Music by : S. M. Subbaiah Naidu Female : Thalaiyae nee vanangaai Thalaiyae nee vanangaai Thalaimaalai thalaikaninthu Thalaimaalai thalaikaninthu Thalaiyaalae palitherun thalaivanai Thalaiyae nee vanangaai Female : Kangaal kaan mingaloo Kangaal kaan mingaloo Kadal nanjunda kandandrannai Endoozh veesi nindraadum piraandrannai Kangaal kaan mingaloo Female : Sevigaazh kaenmingaloo Sevigaazh kaenmingaloo Sivan emmirai sembhavala Eripol maenippiraandriram eppodhum Sevigaazh kaenmingaloo Female : Mukkae nee muralaai Mudhukaadurai mukkannanai Vakkae nokkiya mangai manaalanai Mukkae nee muralaai Mudhukaadurai mukkannanai Vakkae nokkiya mangai manaalanai Mukkae nee muralaai Female : Vaayae vaazhthu kandaai Vaayae vaazhthu kandaai Madhayaanai yuriporthu Madhayaanai yuriporthu Peivaazh kattagathodum piraanendrennai Vaayae vaazhthu kandaai Female : Nenjae nee ninaiyaai Nenjae nee ninaiyaai Nimir punsadai ninmalanai Manjaadum malai mangai manaalanai Nenjae nee ninaiyaai Nimir punsadai ninmalanai Manjaadum malai mangai manaalanai Nenjae nee ninaiyaai Female : Kaikaal koopithozhir Kaikaal koopithozhir Kadi maamalar thoovi nindru Paivaai paambarai yaartha paramanai Paivaai paambarai yaartha paramanai Kaikaal koopithozhir Female : Aakkai yaarpayanenna Arankoyil valam vanthu Pookkaiyaal atti pottriyennadha Ivvyakkkai yaarpayanenna Payan ennaa Female : Kaalgalaarpayanenna Kaalgalaarpayanenna Karai kandanurai koyil Kola gopura kokararan soozhaa Kaalgalaarpayanenna Karai kandanurai koyil Kola gopura kokararan soozhaa Kaalgalaarpayanenna Female : Uttraar yaar ularooo Uttraar yaar ularooo Uttraar yaar ularooo Uyir kondu pompozhudhu Kuttraalathurai koothanallaal Namakkuttraar yaar ullaroo
பாடகி : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா பெண் : தலையே நீ வணங்காய் தலையே நீ வணங்காய் தலைமாலை தலைக்கணிந்து தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலிதேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்.. பெண் : கண்காள் காண்மின்களோ கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோள் வீசி நின்றாடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ.. பெண் : செவிகாள் கேண்மின்களோ செவிகாள் கேண்மின்களோ சிவன் எம்மிறை செம்பவள எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ… பெண் : மூக்கே நீ முரலாய் முதுகாடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய் முதுகாடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்… பெண் : வாயே வாழ்த்து கண்டாய் வாயே வாழ்த்து கண்டாய் மதயானை யுரிபோர்த்து மதயானை யுரிபோர்த்து பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை வாயே வாழ்த்துகண்டாய்…. பெண் : நெஞ்சே நீ நினையாய் நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்.. பெண் : கைகாள் கூப்பித்தொழீர் கைகாள் கூப்பித்தொழீர் கடிமாமலர் தூவி நின்று கடிமாமலர் தூவி நின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழீர்…. பெண் : ஆக்கை யாற்பயனென் அரன்கோயில் வலம் வந்து பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாத இவ்வாக்கை யாற்பயனென் பயன் என்ன பெண் : கால்க ளாற்பயனென கால்க ளாற்பயனென கறைக் கண்டனுறை கோயில் கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென கறைக் கண்டனுறை கோயில் கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென பெண் : உற்றார் ராருளரோ உற்றார் ராருளரோ உற்றார் ராருளரோ உயிர் கொண்டு போம்பொழுது குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றார் ஆருளரோ…….