← Back

Amma Un Karunaikku Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Female : Oyaatha arul mazhaiyae oppariya sezhungarunai Kaayaatha thava punalae kaasiniyil uyirkolla Thaayaagi anaikkindra thalirkaramae nin maenmai Vaayaara isaippatharkku mozhiyulatho yaedulatho Female : Amma….amma un karunaikku alavillaiyae Amma un karunaikku alavillaiyae Adhai alanthingu naan solla arivillaiyae Alanthingu naan solla arivillaiyae…. Male : Bommaanin idangkonda perinpamae marai Porul koorum peruvaazhvin aarambamae Bommaanin idangkonda perinpamae marai Porul koorum peruvaazhvin aarambamae Both : Amma un karunaikku alavillaiyae Adhai alanthingu naan solla arivillaiyae Alanthingu naan solla arivillaiyae…. Male : Siru pillai sambanthan pasi theerththaval Avan sevvaayil kongai than paal vaarththaval Siru pillai sambanthan pasi theerththaval Avan sevvaayil kongai than paal vaarththaval Female : Yaar azhuthaalum thaangaatha manam kondaval Pettra thaaikellaam thaayaaga dhinam nindraval Pettra thaaikellaam thaayaaga dhinam nindraval Aa….aa….aa…..aa….aah….aa…. Female : Kavi paada nool yaedhum kallaathavan Kalvi karpikkum idam thedi sellaathavan Kavi paada nool yaedhum kallaathavan Kalvi karpikkum idam thedi sellaathavan Male : Un thaampoolam thanai vaangi thamizh koorinaan Kaala megaththai pol nindru kavi paadinaan Both : Kaala megaththai pol nindru kavi paadinaan Female : Thangaththai perithaaga ninaiththaenillai Un angathirkinaiyaana thangam illai Thangaththai perithaaga ninaiththaenillai Un angathirkinaiyaana thangam illai Male : En thaaraththin maangazhyam nee thanthathu Un thaayanpai ennendru yaar solvathu En thaaraththin maangazhyam nee thanthathu Un thaayanpai ennendru yaar solvathu Un thaayanpai ennendru yaar solvathu… Both : Amma un karunaikku alavillaiyae Adhai alanthingu naan solla arivillaiyae….
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஓயாத அருள் மழையே ஒப்பறிய செழுங்கருணை காயாத தவப் புனலே காசினியில் உயிர்க்கெல்லாம் தாயாகி அணைக்கின்ற தளிர்கரமே நின் மேன்மை வாயார இசைப்பதற்கு மொழியுளதோ ஏடுளதோ….. பெண் : அம்மா…..அம்மா உன் கருணைக்கு அளவில்லையே அம்மா உன் கருணைக்கு அளவில்லையே அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே…. ஆண் : பெம்மானின் இடங்கொண்ட பேரின்பமே மறை பொருள் கூறும் பெருவாழ்வின் ஆரம்பமே பெம்மானின் இடங்கொண்ட பேரின்பமே மறை பொருள் கூறும் பெருவாழ்வின் ஆரம்பமே இருவர் : அம்மா உன் கருணைக்கு அளவில்லையே அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே… அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே… ஆண் : சிறு பிள்ளை சம்பந்தன் பசி தீர்த்தவள் அவன் செவ்வாயில் கொங்கை தன் பால் வார்த்தவள் சிறு பிள்ளை சம்பந்தன் பசி தீர்த்தவள் அவன் செவ்வாயில் கொங்கை தன் பால் வார்த்தவள் பெண் : யார் அழுதாலும் தாங்காத மனம் கொண்டவள் பெற்ற தாய்க்கெல்லாம் தாயாக தினம் நின்றவள் பெற்ற தாய்க்கெல்லாம் தாயாக தினம் நின்றவள் ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆஹ்….ஆ….. பெண் : கவி பாட நூல் ஏதும் கல்லாதவன் கல்வி கற்பிக்கும் இடம் தேடி செல்லாதவன் கவி பாட நூல் ஏதும் கல்லாதவன் கல்வி கற்பிக்கும் இடம் தேடி செல்லாதவன் ஆண் : உன் தாம்பூலம் தனை வாங்கி தமிழ் கூறினான் காளமேகத்தை போல் நின்று கவி பாடினான் இருவர் : காளமேகத்தை போல் நின்று கவி பாடினான் பெண் : தங்கத்தை பெரிதாக நினைத்தேனில்லை உன் அங்கதிற்கிணையான தங்கம் இல்லை தங்கத்தை பெரிதாக நினைத்தேனில்லை உன் அங்கதிற்கிணையான தங்கம் இல்லை ஆண் : என் தாரத்தின் மாங்கல்யம் நீ தந்தது உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது என் தாரத்தின் மாங்கல்யம் நீ தந்தது உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது….. இருவர் : அம்மா உன் கருணைக்கு அளவில்லையே அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே…