← Back

Iraivan Ulagathai Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Iraivan ulagaththai padaiththaanaam Yaezhmaiyaei avanthaan padaiththaanaam Chorus : Iraivan ulagaththai padaiththaanaam Yaezhmaiyaei avanthaan padaiththaanaam Male : Yaezhaiyai padaiththavan avanendraal Iraivan enbavan edharkaaga Chorus : Yaezhaiyai padaiththavan avanendraal Iraivan enbavan edharkaaga Male : Iraivan enbavan edharkaaga…….. Male : Ponnagai anintha maaligaigal Punnagai marantha man kudisai Ponnagai anintha maaligaigal Punnagai marantha man kudisai Pasi vara angae maaththiraigal Pattiniyaal ingu yaaththiraigal Male : Iru verulagam idhuvendraal Iraivan enbavan edharkaaga…….. Chorus : Iraivan ulagaththai padaiththaanaam Yaezhmaiyaei avanthaan padaiththaanaam Male : Uyarae parakkum kaaththaadi Udhavum yaezhai nool polae Uyarae parakkum kaaththaadi Udhavum yaezhai nool polae Pattam pol aval palapalappaar Nool polae ivar ilaiththiruppaar Male : Iru veriyakkam idhuvendraal Iraivan enbavan edharkaaga…….. Chorus : Iraivan ulagaththai padaiththaanaam Yaezhmaiyaei avanthaan padaiththaanaam Male : Iraivan ingae varavillai Enavae naan angu pogindraen Iraivan ingae varavillai Enavae naan angu pogindraen Male : Varumai muzhuvathum theerntha pinnae Marupadi oru naal naan varuvaen Marupadi oru naal naan varuvaen…
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இறைவன் உலகத்தை படைத்தானாம் ஏழ்மையை அவன்தான் படைத்தானாம் குழு : இறைவன் உலகத்தை படைத்தானாம் ஏழ்மையை அவன்தான் படைத்தானாம் ஆண் : ஏழையை படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக குழு : ஏழையை படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக ஆண் : இறைவன் என்பவன் எதற்காக…… ஆண் : பொன்னகை அணிந்த மாளிகைகள் புன்னகை மறந்த மண் குடிசை பொன்னகை அணிந்த மாளிகைகள் புன்னகை மறந்த மண் குடிசை பசி வர அங்கே மாத்திரைகள் பட்டினியால் இங்கு யாத்திரைகள் ஆண் : இரு வேறுலகம் இதுவென்றால் இறைவன் என்பவன் எதற்காக குழு : இறைவன் உலகத்தை படைத்தானாம் ஏழ்மையை அவன்தான் படைத்தானாம் ஆண் : உயரே பறக்கும் காத்தாடி உதவும் ஏழை நூல் போலே உயரே பறக்கும் காத்தாடி உதவும் ஏழை நூல் போலே பட்டம் போல் அவர் பளபளப்பார் நூல் போலே இவர் இளைத்திருப்பார் ஆண் : இரு வேறியக்கம் இதுவென்றால் இறைவன் என்பவன் எதற்காக குழு : இறைவன் உலகத்தை படைத்தானாம் ஏழ்மையை அவன்தான் படைத்தானாம் ஆண் : இறைவன் இங்கே வரவில்லை எனவே நான் அங்கு போகின்றேன் இறைவன் இங்கே வரவில்லை எனவே நான் அங்கு போகின்றேன் ஆண் : வறுமை முழுவதும் தீர்ந்த பின்னே மறுபடி ஒரு நாள் நான் வருவேன் மறுபடி ஒரு நாள் நான் வருவேன்………