← Back

Enge Irunthai Isaiye Male Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Engae irundhaai isaiyae… Male : Engae irundhaai isaiyae Nee engae irundhaai isaiyae Uyirilaa unarvilaa Manadhilaa madhiyilaa Idhil edhuvo naanum ariyaen Aanaal enakkul irukkiraai Engirundho enakkul Allida kuraiyaa ootraai surakkiraai Male : Engae irundhaai isaiyae Male : Kaatril kalappadhaal Nee kaatrin vadivamaa sol Oliyaai udhippadhaal Nee oliyin uruvamaa sol Uruvam yaedhum illaamal Ulagai eerppaayae Ulagin uyirgal unnidathil Ullam izhappaarae Male : Isaiyil mayangaa uyir yaedhu Mazhaiyil vilaiyaa payir yaedhu Idhu unakkum enakkum Poorva jenma bandham thaan Male : Engae irundhaai isaiyae Nee engae irundhaai isaiyae Male : Ethanai oorgalil Naam inaindhu paadi chendrom Ethanai sevigalil Thaen virundhu padaithu chendrom Paadhai illaa oorukkellaam Paattaal vazhi pottom Vaedhanai namakkul irundhaalum Paattaal thuyar theerthom Male : Isaiyai arindhida vizhi edharkku Inam thaan kandida sevi irukku Ingu paadum paadal Pazhaiya ninaivai kooraadho Male : Engae irundhaai isaiyae Nee engae irundhaai isaiyae Uyirilaa unarvilaa Manadhilaa madhiyilaa Idhil edhuvo naanum ariyaen Aanaal enakkul irukkiraai Engirundho enakkul Allida kuraiyaa ootraai surakkiraai Male : Engae irundhaai…isaiyae….
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எங்கே இருந்தாய் இசையே… ஆண் : எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே உயிரிலா உணர்விலா மனதிலா மதியிலா இதில் எதுவோ நானும் அறியேன் ஆனால் எனக்குள் இருக்கிறாய் எங்கிருந்தோ எனக்குள் அள்ளிடக் குறையா ஊற்றாய் சுரக்கிறாய் ஆண் : எங்கே இருந்தாய் இசையே ஆண் : காற்றில் கலப்பதால் நீ காற்றின் வடிவமா சொல் ஒலியாய் உதிப்பதால் நீ ஒலியின் உருவமா சொல் உருவம் ஏதும் இல்லாமல் உலகை ஈர்ப்பாயே உலகின் உயிர்கள் உன்னிடத்தில் உள்ளம் இழப்பாரே இசையில் மயங்கா உயிர் ஏது மழையில் விளையா பயிர் ஏது இது உனக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம் தான் ஆண் : எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே ஆண் : எத்தனை ஊர்களில் நாம் இணைந்து பாடிச் சென்றோம் எத்தனை செவிகளில் தேன் விருந்து படைத்துச் சென்றோம் பாதை இல்லா ஊருக்கெல்லாம் பாட்டால் வழி போட்டோம் வேதனை நமக்குள் இருந்தாலும் பாட்டால் துயர் தீர்த்தோம் இசையை அறிந்திட விழி எதற்கு இனம் தான் கண்டிட செவி இருக்கு இங்கு பாடும் பாடல் பழையை நினைவைக் கூறாதோ ஆண் : எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே உயிரிலா உணர்விலா மனதிலா மதியிலா இதில் எதுவோ நானும் அறியேன் ஆனால் எனக்குள் இருக்கிறாய் எங்கிருந்தோ எனக்குள் அள்ளிடக் குறையா ஊற்றாய் சுரக்கிறாய் ஆண் : எங்கே இருந்தாய் இசையே