← Back

Uyirodu Poradum Song Lyrics

Uyirodu Poradum Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singer : Seerkazhi Govindarajan Music by : G. Ramanathan Lyrics by : A. Maruthakasi Male : Iruttaraiyil ullathadaa ulagam endrae Iyambivittaan anupavaththaal idhayam nonthae Irakkamattror saathi seyalin kodumaiyaalae Inaintha ullam iru karai pol aanathadaa Male : Uyirodu poraadum velai Uyirodu poraadum velai Kaanum igavaazhvin sugam yaavum kankaatchi saalai Male : Uyirodu poraadum velai Seyalaadum sathikaarar thollai Sontha mathiyaalae nee vella mudiyaatha ellai Male : Ulagaalum podhu neethi engae Unmai uruvaana ilangandru thalai saainthathingae Ulagaalum podhu neethi engae Unmai uruvaana ilangandru thalai saainthathingae Male : Vilaiyaadum aniyaayaththaalae Vilaiyaadum aniyaayaththaalae Solai malar kanda pudhuvaazhvu pariponathaalae Male : Uyirodu vaa Poraadum velai Male : Malai thendral puyalaan pothu Mangai manathaara oru theengum ninaiyaatha pedhai Malai thendral puyalaan pothu Mangai manathaara oru theengum ninaiyaatha pedhai Male : Manamaalai sugam kaanum neram Kadhal paliyaagi rathameethu poguthe dhooram Aaa…aa…aa…aa…. Male : Uyirodu poraadum velai Male : Kadaloram manal veedu saatchi Kandum kadhai pesum puvi maanthar soozhchchi Kadaloram manal veedu saatchi Kandum kadhai pesum puvi maanthar soozhchchi Male : Udal vitti uyirpogum kaatchi Idhai unaraatha manang kallo cheechee
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றே இயம்பி விட்டான் அனுபவத்தால் இதயம் நொந்தே இரக்கமற்றோர் சதிச் செயலின் கொடுமையாலே இணைந்த உள்ளம் இருகரை போல் ஆனதடா ஆண் : உயிரோடு போராடும் வேளை உயிரோடு போராடும் வேளை காணும் இகவாழ்வின் சுகம் யாவும் கண்காட்சி சாலை ஆண் : உயிரோடு போராடும் வேளை செயலாடும் சதிகாரர் தொல்லை சொந்த மதியாலே நீ வெல்ல முடியாத எல்லை ஆண் : உலகாளும் பொது நீதி எங்கே உண்மை உருவான இளங்கன்று தலை சாய்ந்ததிங்கே உலகாளும் பொது நீதி எங்கே உண்மை உருவான இளங்கன்று தலை சாய்ந்ததிங்கே ஆண் : விளையாடும் அநியாயத்தாலே விளையாடும் அநியாயத்தாலே சோலை மலர் கண்ட புதுவாழ்வு பறிபோனதாலே… ஆண் : உயிரோடு போ ராடும் வேளை ஆண் : மலைத் தென்றல் புயலான போது மங்கை மனதார ஒரு தீங்கும் நினையாத பேதை மலைத் தென்றல் புயலான போது மங்கை மனதார ஒரு தீங்கும் நினையாத பேதை ஆண் : மணமாலை சுகம் காணும் நேரம் காதல் பலியாகி ரதமீது போகுதே தூரம்….. ஆ…ஆ….ஆ….ஆ… ஆண் : உயிரோடு போராடும் வேளை ஆண் : கடலோரம் மணல் வீடு சாட்சி கண்டும் கதை பேசும் புவி மாந்தர் சூழ்ச்சி கடலோரம் மணல் வீடு சாட்சி கண்டும் கதை பேசும் புவி மாந்தர் சூழ்ச்சி ஆண் : உடல் விட்டு உயிர்போகும் காட்சி இதை உணராத மனங் கல்லோ சீச்சீ……