← Back

Vanathai Kadavul Thalaiyal Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : T. R. Pappa Male : Ovvoru aalukkum oru jaan vayiru Unakku mattum enna onbathu vayiru Thevaikku mele semichha aalu Aaa…..aa…..aa…..aa….aa…. Thirudannuthaan oorula peru Male : Vanaththai kadavul thalaiyaal alanthaan Bhoomiyai avanae kaalaal alanthaan Manushanai ellam manasaal alanthaan…..oohhoi En maamanai mattum panaththaal alanthaan Male : Azhagaa poranthathu unakkoru ponnu Aaaduthu paar athu medaiyil ninnu Manushaa unakkum irukkuthu kannu Un mandaiyil mattum yaen kalimannu Male : Vanaththai kadavul thalaiyaal alanthaan Bhoomiyai avanae kaalaal alanthaan Male : Androruvan thaer koduththaan Auththoruvan thalai koduththaan Kedu ketta maamaavo Kizhinja kudai koduththaan Kizhinja kudaikkallavo Vallal endru paereduththaan Antha vallal maanamellam Santhiyilae ivan keduththaan Male : Karnan poranthathu naattukku perumai Kamban poranthathu thamizhukku perumai aaa….aa… Kamban poranthathu thamizhukku perumai Perumai illathavan poranthathu kodumai Mama kodumai Perumai illathavan poranthathu kodumai Un porantha naalilae iththuthaan puthumai Male : Vanaththai kadavul thalaiyaal alanthaan Bhoomiyai avanae kaalaal alanthaan
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா ஆண் : ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு ஜான் வயிறு உனக்கு மட்டும் என்ன ஒன்பது வயிறு…… தேவைக்கு மேலே சேமிச்ச ஆளு ஆஅ……ஆ…….ஆ…….ஆ…….. திருடனுன்னுதான் ஊர்லே பேரு……. ஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான் பூமியை அவனே காலால் அளந்தான் மனுஷனை எல்லாம் மனசால் அளந்தான்…. ஓஹ்ஹோய் என் மாமனை மட்டும் பணத்தால் அளந்தான் ஆண் : அழகா பொறந்தது உனக்கொரு பொண்ணு ஆடுது பார் அது மேடையில் நின்னு மனுஷா உனக்கும் இருக்குது கண்ணு உன் மண்டையில் மட்டும் ஏன் களிமண்ணு ஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான் பூமியை அவனே காலால் அளந்தான் ஆண் : அன்றொருவன் தேர் கொடுத்தான் அடுத்தொருவன் தலை கொடுத்தான் கேடு கெட்ட மாமாவோ கிழிஞ்ச குடை கொடுத்தான் கிழிஞ்ச குடைக்கல்லவோ வள்ளல் என்று பேரெடுத்தான் அந்த வள்ளல் மானமெல்லாம் சந்தியிலே இவன் கெடுத்தான் ஆண் : கர்ணன் பொறந்தது நாட்டுக்குப் பெருமை கம்பன் பொறந்தது தமிழுக்குப் பெருமை ஆ…..ஆ…. கம்பன் பொறந்தது தமிழுக்குப் பெருமை பெருமையில்லாதவன் பொறந்தது கொடுமை மாமா கொடுமை பெருமையில்லாதவன் பொறந்தது கொடுமை உன் பொறந்த நாளிலே இதுதான் புதுமை…… ஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான் பூமியை அவனே காலால் அளந்தான்