← Back

Aatha Thottilile Song Lyrics

Singer : Nivas K. Prasanna Music by : Nivas K. Prasanna Oppari : …………………………… Male : Aaththa thottililae arai naali aadaliyae Appan thozhmela ambaari yeralaiyae…aaa Aaththa thottililae arai naali aadaliyae Appan thozhmela ambaari yeralaiyae Male : Thaai ootti thingakalaiyae Thagapan idam thangalaiyae Neeyootti valarthapullai Thee mootta nikkiranae Male : Thaai ootti thingakalaiyae Thagapan idam thangalaiyae Neeyootti valarthapullai Thee mootta nikkiranae Male : Ammaannu palliyilae Arichuvadi padikkaiyilae Akkaa thaan ellaamnu Enni enni valandhenae Male : Kunjukku panjaaram Kodangaiyilae irunthathadi Panjaaram kalanthathadi Paathi uyir arunthathadi Oppari : ……………………………….. Male : Kudicha thaai paalu Kumattil irukkaiyilae Idi vanthu vizhunthathunnu Ellaarum sonnaaga Paasatha parikoduthu Paadhivali nikkirenae Vamsamtha palikoduthu Valiyaththu ponenae Male : Ellaamaa thaan irunthu Iththu ponavalae Sollaama ponadhenga Thudikkuthadi en usuru Male : Ee erumbu andum-nnu Imaikkaama irunthavalae Oorumakka vanthiruchu Urunguriyae mulippatheppo Male : Maadu alaralaiyae Valipoonai marikkalaiyae Kaada saakkuruvi Kaththi thaan kolaikaliyae Kudi kavura poguthunnu Kevuliyum sollaliyae Maada velakkananju Maranaththa kuraliyae Male : Kattililae kuththa vachu Kaal amukka nenachirunthen Aal illaa kattilila Kannurakkam kondathu yen Male : Oor maala naan vaangi Un aasi vaangumunnae Neer maalai oor edukka Nedunthookkam kondathu yen Male : Eeraaru saarathil Yetri vara naanirukka Ooraaru adikkullae Ulluranga ponathu yen Male : En aaththa…aaaa….aa En aaththa… En aaththa… Oppari : ……………………………….. Male : Aaththaa……
பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஒப்பாரி : …………………………….. ஆண் : ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே…ஆஅ ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே…ஆஅ ஆண் : தாய் ஊட்டி திங்கலையே தகப்பன் இடம் தங்களையே நீயூட்டி வளர்த்தபுள்ள தீ மூட்ட நிக்கிறானே ஆண் : தாய் ஊட்டி திங்கலையே தகப்பன் இடம் தங்களையே நீயூட்டி வளர்த்தபுள்ள தீ மூட்ட நிக்கிறானே ஆண் : அம்மான்னு பள்ளியிலே அரிச்சுவடி படிக்கையிலே அக்காதான் எல்லாம்னு எண்ணி எண்ணி வளந்தேனே ஆண் : குஞ்சுக்கு பஞ்சாரம் கொடங்கையிலே இருந்ததடி பஞ்சாரம் கலந்ததடி பாதி உயிர் அருந்ததடி ஒப்பாரி : …………………………….. ஆண் : குடிச்ச தாய் பாலு குமட்டில் இருக்கையிலே இடி வந்து விழுந்ததுன்னு எல்லாரும் சொன்னங்க பாசத்த பறிகொடுத்து பாதிவழி நிக்கிறேனே வம்சத்த பலிகொடுத்து வழியத்து போனேனே ஆண் : எல்லாமாதான் இருந்து இத்து போனவளே சொல்லாம போனதெங்க துடிக்குதடி என் உசுரு ஆண் : ஈ எறும்பு அண்டும்னு இமைக்காம இருந்தவளே ஊருமுக்க வந்திருச்சு உறங்குறியே முழிப்பதெப்போ ஆண் : மாடு அலறலையே வலிபூனை மறிகலையே காட சாக்குருவி கத்திதான் கொலைக்கலையே குடி கவுர போகுதுன்னு கெவுளியும் சொல்லலையே மாட வெளக்கனஞ்சு மரணத்த கூறலையே ஆண் : கட்டிலிலே குத்த வச்சு கால் அமுக்க நினைச்சிருந்தேன் ஆள் இல்லா கட்டிலிலே கண்ணுறக்கம் கொண்டது ஏன் ஆண் : ஊர் மாலை நான் வாங்கி உன் ஆசை வாங்குமுன்னே நீர் மாலை ஊர் எடுக்க நெடுந்தூக்கம் கொண்டது ஏன் ஆண் : ஈராறு சாரத்தில் ஏற்றி வர நானிருக்க ஓராரு அடிக்குள்ளே உள்ளுறங்க போனது ஏன் ஆண் : என் ஆத்தா….ஆஅ….ஆ என் ஆத்தா…. என் ஆத்தா…. ஒப்பாரி : ……………………………. ஆண் : ஆத்தா……………….