← Back

Panjali Oruthikku Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : K. V. Mahadevan Lyrics by : Vairamuthu Male : Paanjaali oruthikku Thugil koduthaan vaikundhan Paaril ullor anaivarukkum Thugil koduthaan sengundhan Male : Sengundhana illai vaigundhana Sengundhana illai vaigundhana Sirandhavan yaar ingu uyarndhavan yaar Bairavi thaayae solladi neeyae Male : Sengundhana illai vaigundhana Sengundhana illai vaigundhana Sirandhavan yaar ingu uyarndhavan yaar Bairavi thaayae solladi neeyae Bairavi thaayae solladi neeyae Male : Paarkadalil naalum avan thuyilvaan Naam pallieluchi sonnaal pinnar ezhuvaan Paarkadalil naalum avan thuyilvaan Naam pallieluchi sonnaal pinnar ezhuvaan Male : Paavadiyil noolai padhaniduvaan Paavadiyil noolai padhaniduvaan Than pasiyilum noolukivan kanjiduvaan Than pasiyilum noolukivan kanjiduvaan Male : Andha malavan ariya malavan Indha noolavan endrum thooyavan engal Sengundhana illai vaigundhana Sengundhana illai vaigundhana Male : Aadaiyila manidhan arai manidhan Aadai anindhavan than muzhu manidhan Aadaiyila manidhan arai manidhan Aadai anindhavan than muzhu manidhan Male : Arai manidhan thannai muzhu manidhan endru Aakkiya ivan androo perum punidhan Arai manidhan thannai muzhu manidhan endru Aakkiya ivan androo perum punidhan Male : Noolilum sikkal vaazhvilum sikkal aayinum Dhinamum ayaradhu uzhaikkum Sengundhana illai vaigundhana Sirandhavan yaar ingu uyarndhavan yaar Bairavi thaayae solladi neeyae Bairavi thaayae solladi neeyae Male : Angaiyarkanni ennum meenatchiyae indha Avaniyengum unadhu arulaatchiyae Angaiyarkanni ennum meenatchiyae indha Avaniyengum unadhu arulaatchiyae Male : Niraivaana arul sindhum vizhi kattamma Niraivaana arul sindhum vizhi kattamma Engal nesavaalar kulam vaazha vazhi kattamma Niraivaana arul sindhum vizhi kattamma Engal nesavaalar kulam vaazha vazhi kattamma Vazhi kattamma vazhi kattamma vazhi kattamma
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : பாஞ்சாலி ஒருத்திக்கு துகில் கொடுத்தான் வைகுந்தன் பாரில் உள்ளோர் அனைவருக்கும் துகில் கொடுத்தான் செங்குந்தன் ஆண் : செங்குந்தனா இல்லை வைகுந்தனா செங்குந்தனா இல்லை வைகுந்தனா சிறந்தவன் யார் இங்கு உயர்ந்தவன் யார் பைரவி தாயே சொல்லடி நீயே ஆண் : செங்குந்தனா இல்லை வைகுந்தனா செங்குந்தனா இல்லை வைகுந்தனா சிறந்தவன் யார் இங்கு உயர்ந்தவன் யார் பைரவி தாயே சொல்லடி நீயே பைரவி தாயே சொல்லடி நீயே ஆண் : பாற்கடலில் நாளும் அவன் துயில்வான் நாம் பள்ளியெழுச்சி சொன்னால் பின்னர் எழுவான் பாற்கடலில் நாளும் அவன் துயில்வான் நாம் பள்ளியெழுச்சி சொன்னால் பின்னர் எழுவான் ஆண் : பாவடியில் நூலை பதனிடுவான் பாவடியில் நூலை பதனிடுவான் தன் பசியிலும் நூலுக்கிவன் கஞ்சியிடுவான் தன் பசியிலும் நூலுக்கிவன் கஞ்சியிடுவான் ஆண் : அந்த மாலவன் அரிய மாயவன் இந்த நூலவன் என்றும் தூயவன் எங்கள் செங்குந்தனா இல்லை வைகுந்தனா செங்குந்தனா இல்லை வைகுந்தனா ஆண் : ஆடையில்லா மனிதன் அரை மனிதன் ஆடை அணிந்தவன் தான் முழு மனிதன் ஆடையில்லா மனிதன் அரை மனிதன் ஆடை அணிந்தவன் தான் முழு மனிதன் ஆண் : அரை மனிதன் தன்னை முழு மனிதன் என்று ஆக்கிய இவனன்றோ பெரும் புனிதன் அரை மனிதன் தன்னை முழு மனிதன் என்று ஆக்கிய இவனன்றோ பெரும் புனிதன் ஆண் : நூலிலும் சிக்கல் வாழ்விலும் சிக்கல் ஆயினும் தினமும் அயராது உழைக்கும் செங்குந்தனா இல்லை வைகுந்தனா சிறந்தவன் யார் இங்கு உயர்ந்தவன் யார் பைரவி தாயே சொல்லடி நீயே பைரவி தாயே சொல்லடி நீயே.. ஆண் : அங்கயற்கண்ணி என்னும் மீனாட்சியே இந்த அவனியெங்கும் உந்தன் அருளாட்சியே அங்கயற்கண்ணி என்னும் மீனாட்சியே இந்த அவனியெங்கும் உந்தன் அருளாட்சியே ஆண் : நிறைவான அருள் சிந்தும் விழிக் காட்டம்மா நிறைவான அருள் சிந்தும் விழிக் காட்டம்மா எங்கள் நெசவாளர் குலம் வாழ வழிக் காட்டம்மா நிறைவான அருள் சிந்தும் விழிக் காட்டம்மா எங்கள் நெசவாளர் குலம் வாழ வழிக் காட்டம்மா வழிக் காட்டம்மா வழிக் காட்டம்மா வழிக் காட்டம்மா