← Back

Mahanadi Song Lyrics

Singer : Anurag Kulkarni Music by : Mickey J. Meyer Male : Thirai minnathaan Tharai minnathaan Pudhu vinmeenaai ival vandhaalae Aan singangal thalai thookkithaan Thanai paarkkathaan ival nindraalae Male : Vizhiyaal edhaiyum Mozhivaal ival Mozhigal kadandhum Olirvaal ival Oliyaai azhagai pozhivaal ival Nilavaai nilavaai kaaygindraal Male : Ilainjar kanavil Dhinamum ival Palarin manadhil Manamum ival Silarin vizhiyil panamum ival Karaigal kadandhae paaigindraal Chorus : Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi… Male : Pugazhai thurathi Palarum alaivaarae Ivalai thurathi Pugazh alaiya kandaal Uyara uyara Thimir valarum ooril Vaanai adaindhum Panivai ival kondaal Male : Ival thangai magal Annai ena Vedam ellaamae eduppaal Oru dhaanam ena Yaarum vara Theivam ondraagi koduppaal Chorus : Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi… Male : Veliyil ivaloo Kalangaraiyin theeyaai Veettil ivaloo Agal malarum theeyaai Thiraiyai kadandhum Valarum oru kaadhal Arangai kadandhum Thodarum oru paadal Male : Azhagaai orr kanaa Kaadhal kanaa Adhuvae vaazhvendru irundhaal Thannullae chiru Vinmeen karu Kondae vinnaagi virindhaal Chorus : Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi… Mahaanadhi… mahaanadhi…
பாடகர் : அனுராக் குல்கர்னி இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர் ஆண் : திரை மின்னத்தான் தரை மின்னத்தான் புது விண்மீனாய் இவள் வந்தாளே ஆண் சிங்கங்கள் தலை தூக்கித்தான் தனைப் பார்க்கத்தான் இவள் நின்றாளே ஆண் : விழியால் எதையும் மொழிவாள் இவள் மொழிகள் கடந்தும் ஒளிர்வாள் இவள் ஒளியாய் அழகாய் பொழிவாள் இவள் நிலவாய் நிலவாய் காய்கின்றாள் ஆண் : இளைஞர் கனவில் தினமும் இவள் பலரின் மனதில் மணமும் இவள் சிலரின் விழியில் பணமும் இவள் கரைகள் கடந்தே பாய்கின்றாள் குழு : மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி… ஆண் : புகழைத் துரத்தி பலரும் அலைவாரே இவளைத் துரத்தி புகழ் அலையக் கண்டாள் உயர உயர திமிர் வளரும் ஊரில் வானை அடைந்தும் பணிவை இவள் கொண்டாள் ஆண் : இவள் தங்கை மகள் அன்னை என வேடம் எல்லாமே எடுப்பாள் ஒரு தானம் என யாரும் வர தெய்வம் ஒன்றாகி கொடுப்பாள் குழு : மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி… ஆண் : வெளியில் இவளோ கலங்கரையின் தீயாய் வீட்டில் இவளோ அகல் மலரும் தீயாய் திரையைக் கடந்தும் வளரும் ஒரு காதல் அரங்கைக் கடந்தும் தொடரும் ஒரு பாடல் ஆண் : அழகாய் ஓர் கனா காதல் கனா அதுவே வாழ்வென்று இருந்தாள் தன்னுள்ளே சிறு விண்மீன் கரு கொண்டே விண்ணாக விரிந்தாள் குழு : மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி… மகாநதி…