← Back

Andru Kollum Song Lyrics

Singer : K. B. Sundarambal Music by : R. Sudharsanam Female : Needhiyae neeyum Irukkindraayaa… Illai neeyum andha kolai kalathil Uyir vittaayaa… Female : Andru kollum arasin aanai Vendru vittadhu Nindru kollum dheivam ingae Vandhu vittadhu Female : Andru kollum arasin aanai Vendru vittadhu Nindru kollum dheivam ingae Vandhu vittadhu Female : Kaaladi thaamarai novadhu marandhu Kaadhalanodu nadandhaalae Andha kaalamum thodarndhu nadandhadhai arindhu Karpukkarasi thudithaalae Adaiyaa kadhavaai imaiyaa vizhiyaai Aayiram yugangal poruthaalae Indru vilaiyaa nilathin vidhaiyaai pona Vaedhanai arindhu thudithaalae Female : Andru kollum arasin aanai Vendru vittadhu Nindru kollum dheivam ingae Vandhu vittadhu Female : Veyilae illaadha kaalathil kidaikkindra Vaedhaa payanenna Kenji vaendiya pozhudhu odhungiya needhi Vandhenna poyenna… Female : Uyirae pona pin udalenum koottukku Uyarvenna thaazhvenna… Female : Seiyaa pizhaikkae thalaiyadhu veezhndhaal Seidhavan gadhi enna… seidhavan gadhi enna… Pizhai seidhavan gadhi enna…
பாடகி : கே. பி. சுந்தராம்பாள் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : நீதியே நீயும் இருக்கின்றாயா… இல்லை நீயும் அந்த கொலைக் களத்தில் உயிர் விட்டாயா… பெண் : அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது பெண் : அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது பெண் : காலடித் தாமரை நோவது மறந்து காதலனோடு நடந்தாளே அந்தக் காலமும் தொடர்ந்து நடந்ததை அறிந்து கற்புக்கரசி துடித்தாளே அடையாக் கதவாய் இமையா விழியாய் ஆயிரம் யுகங்கள் பொறுத்தாளே இன்று விளையா நிலத்தின் விதையாய்ப் போன வேதனை அறிந்து துடித்தாளே பெண் : அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது பெண் : வெயிலே இல்லாத காலத்தில் கிடைக்கின்ற வேதாத் பயனென்ன கெஞ்சி வேண்டிய பொழுது ஒதுங்கிய நீதி வந்தென்ன போயென்ன… பெண் : உயிரே போன பின் உடலெனும் கூட்டுக்கு உயர்வென்ன தாழ்வென்ன… செய்யாப் பிழைக்கே தலையது வீழ்ந்தால் செய்தவன் கதி என்ன… செய்தவன் கதி என்ன… பிழை செய்தவன் கதி என்ன…