← Back

Megam Pola Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : G. V. Prakash Kumar Male : Megam pola oru kaadhal vandhathadi Neerai vaarkum ena nindren nindrenae Minnal minni idi thandhu sendrathadi Kannil mazhai peruga vendhen vendhenae Male : Manasu thee pidithu yerigiradhae En maarbu kootil uyir vegiradhae Uyir vegum podhum un per solgiradhae Male : Megam pola oru kaadhal vandhathadi Neerai vaarkum ena nindren nindrenae Minnal minni idi thandhu sendrathadi Kannil mazhai peruga vendhen vendhenae Male : Uyirae endrazhaikadha Kaadhal yedhu Uyirae nam udal kollum sogam yedhu Kannodu medhuvaga thodangum idhu Kanneril mudigindra payanam idhu Male : Kaadhal endra villil Ennai ambaai seidhaai Villum ambum ondraai Serndhu vaazhadhae Male : Vittu pogum podhae Viragaagi ponen Viragukkullae Ratha ottam kidayathae Male : Uyir vittu ponaalum Unakkana en ennam Udal vittu pogadhadi ohooo Ohooo…ooo Male : Megam pola oru kaadhal vandhathadi Neerai vaarkum ena nindren nindrenae Male : Nenjodu vali vandhu Kudi kondathu Ninaivendra mul kaadu Valargindrathu Male : Kaanadha iru kannum Udaigindrathu Kadal ezhum Kadan vaangi azhugindrathu Male : Kaadhal endra rojaa Nenjil nattu ponaai Neer vaarka en kannil neer illai Alli thindra paarvai Solli sendra vaarthai Enai vittu pona pinnae vaazhvillai Male : {Petraalae avalum penn Kondraai neeyum penn Pazhi poda vazhi illaiyae} (2) Ohooo ooo hooo
பாடகர் : ஷங்கர் மாதவன் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : மேகம் போல ஒரு காதல் வந்ததடி நீரை வார்க்கும்மென நின்றேன் நின்றேனே….. ஆண் : மின்னல் மின்னி இடி தந்து சென்றதடி கண்ணில் மழை பெருக வெந்தேன் வெந்தேனே… ஆண் : மனசு தீப் பிடித்து எரிகிறதே என் மார்புக்கூட்டில் உயிர் வேகிறதே உயிர் வேகும் போதும் உன் பேர் சொல்கிறதே ஆண் : மேகம் போல ஒரு காதல் வந்ததடி நீரை வார்க்கும்மென நின்றேன் நின்றேனே ஆண் : மின்னல் மின்னி இடி தந்து சென்றதடி கண்ணில் மழை பெருக வெந்தேன் வெந்தேனே… ஆண் : உயிரே என்றழைக்காத காதல் எது உயிரே நம் உடல் கொள்ளும் சோகம் இது கண்ணோடு மெதுவாக தொடங்கும் இது… கண்ணீரில் முடிகின்ற பயணம் இது ஆண் : காதல் என்ற வில்லில் என்னை அம்பாய் செய்தாய் வில்லும் அம்பும் ஒன்றாய் சேர்ந்து வாழாதே விட்டு போகும் போதே விறகாகிபோனேன் விறக்குக்குள்ளே ரத்த ஓட்டம் கிடையாதே ஆண் : உயிர் விட்டு போனாலும் உனக்கான என் எண்ணம் உடல் விட்டு போகாதடி ஓ….ஓ… ஆண் : மேகம் போல ஒரு காதல் வந்ததடி நீரை வார்க்கும்மென நின்றேன் நின்றேனே….. ஆண் : நெஞ்சோடு வலி வந்து குடி கொண்டது நினைவென்ற முள் காடு வளர்கின்றது ஆண் : காணாத இரு கண்ணும் உடைகின்றது கடல் ஏழும் கடன் வாங்கி அழுகின்றது காதல் என்ற ரோஜா நெஞ்சில் நட்டுப் போனாய் ஆண் : நீர் வார்க்க என் கண்ணில் நீர் இல்லை அள்ளி தின்ற பார்வை ஆண் : சொல்லி சென்ற வார்த்தை எனை விட்டுப் போன பின்னே வாழ்வில்லை ஆண் : {பெற்றாலே அவளும் பெண் கொன்றாய் நீயும் பெண் பழி போட வழி இல்லையே} (2) ஆண் : ஓ…………..