← Back

Malare Thendral Paadum Duet Song Lyrics

Singers : Arunmozhi and S. Janaki Music by : Ilayaraja Male : { Malarae thendral paadum gaanam idhu Nilavae unnai koodum vaanam idhu } (2) Female : Nilam idam maarinaalum Nizhal niram maarinaalum Male : Nilai perum kaadhal ennum Nijam niram maaridadhu Female : Iraivanin theerpu idhu oh oh Evar idhai maatruvadhu Male : Malarae thendral paadum gaanam idhu Female : …………………………………. Male : Boopaalam ketkum adhikaalaiyum Poonjolai pookum ila maalaiyum Female : Nee andri yedhu oru nyaabagam Nee pesum pechu manivaasagam Male : Ullam ennum veedengum Un azhagil naan dhaanae Sithirathai pol endrum Otti vaithu paarpenae Female : Un paruvam ilanthalirae Unakena naan vaazhgiren Male : Malarae thendral paadum gaanam idhu Nilavae unnai koodum vaanam idhu Female : ………………………………………… Female : Maangalyam soodum mana naal varum Kalyana maalai iru thol varum Male : Vaai aara vaazhtha indha oor varum Oorgolam poga mani ther varum Female : Solliyadhu polae nam sorgangal kai koodum Vandhadhoru naal endrae sindhukavi kan paadum Male : Valai karamum thunai karamum Varaindhidum thaen kaaviyam Female : Malarae thendral paadum gaanam idhu Nilavae unnai koodum vaanam idhu Male : Nilam idam maarinaalum Nizhal niram maarinaalum Female : Nilai perum kaadhal ennum Nijam niram maaridadhu Male : Iraivanin theerpu idhu oh oh Evar idhai maatruvadhu Female : Malarae thendral paadum gaanam idhu Male : Nilavae unnai koodum vaanam idhu
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : அருண்மொழி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { மலரே தென்றல் பாடும் கானம் இது நிலவே உன்னை கூடும் வானம் இது } (2) பெண் : நிலம் இடம் மாறினாலும் நிழல் நிறம் மாறினாலும் ஆண் : நிலைபெறும் காதலென்னும் நிஜம் நிறம் மாறிடாது பெண் : இறைவனின் தீர்ப்பு இது ஓ ஓ எவர் இதை மாற்றுவது ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது பெண் : ……………………… ஆண் : பூபாளம் கேட்கும் அதிகாலையும் பூஞ்சோலை பூக்கும் இளமாலையும் பெண் : நீ அன்றி ஏது ஒரு ஞாபகம் நீ பேசும் பேச்சு மணிவாசகம் ஆண் : உள்ளம் என்னும் வீடெங்கும் உன் அழகில் நான் தானே சித்திரத்தை போல் என்றும் ஒட்டி வைத்து பார்ப்பேனே பெண் : உன் பருவம் இளந்தளிரே உனக்கென நான் வாழ்கிறேன் ஆண் : மலரே தென்றல் பாடும் கானம் இது நிலவே உன்னை கூடும் வானம் இது பெண் : ……………………… பெண் : மாங்கல்யம் சூடும் மண நாள் வரும் கல்யாண மாலை இரு தோள் வரும் ஆண் : வாய் ஆற வாழ்த்த இந்த ஊர் வரும் ஊர்கோலம் போக மணி தேர் வரும் பெண் : சொல்லியது போலே நம் சொர்கங்கள் கை கூடும் வந்ததொரு நாள் என்றே சிந்து கவி கண் பாடும் ஆண் : வலை கரமும் துணை கரமும் வரைந்திடும் தேன் காவியம் பெண் : மலரே தென்றல் பாடும் கானம் இது நிலவே உன்னை கூடும் வானம் இது ஆண் : நிலம் இடம் மாறினாலும் நிழல் நிறம் மாறினாலும் பெண் : நிலைபெறும் காதலென்னும் நிஜம் நிறம் மாறிடாது ஆண் : இறைவனின் தீர்ப்பு இது ஓ ஓ எவர் இதை மாற்றுவது பெண் : மலரே தென்றல் பாடும் கானம் இது ஆண் : நிலவே உன்னை கூடும் வானம் இது