← Back

Kandukondain Kandukondain Song Lyrics

Singers : Hariharan and Mahalakshmi Iyer Music by : A. R. Rahman Male : Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Viral thodum thoorathilae Vennilavu kandukonden Male : Vennila velichcham Kinnathil vizhundhu Nirainthaal valindhaal magizhchi Male : Vennilaa velichcham Kinnaththai udaithaal Uyirai udaippaal oruthi Female : En kan paarthathu En kai serumo Male : Kai seraamalae Kanneer serumoo…. Female : Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Male : Malar manjam Vizhi kenjum Manam anjum allavaa Female : Uyir minjum Ival nenjam Un thanjam allavaa Male : Un thanimaiyin kadhavin Thaazh neekkavaa Female : Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Female : Megam thiranthaal Adharkul un mugam paarkiren Pookkal thiranthaal Adharkul un kural ketkiren Male : Kangalai thirandhum Kanavugal valarkkum Kaadhalin viralgal Kallaiyum thirakkum Female : Unnai thediyae Ini enadhu payanamo Endhan saalaigal Un veettil mudiyumo Male : Ye kanavu mangaiyae Unadhu manadhu Enadhu manadhil inaiyumo Female : Kandukonden kandukonden..eh hey Kaadhal mugam kandukonden..eh hey Male : Viral thodum thoorathilae..ey..hey Vennilavu kandukonden Chorus : ………………………. Male : Aaaahaaa…. Nadhiyin thedal Kadaisiyil kadal kaanbadhu Uyirin thedal Kadaisiyil unai kaanbadhu Female : Kadal konda nadhiyo Mugam thanai ilakkum Naan unnil kalanthaal Pudhumugam kidaikkum Male : Natchathirangalai Oru naaril kattuven Endhan neramum Un kadhavu thattuven Female : En kaadhal dhevanae Enadhu imaiyil Unadhu vizhigal mooduven Male : Kandukonden kandukonden.. Female : Kandukonden kandukonden… Male : Kaadhal mugam kandukonden.. Female : Kaadhal mugam kandukonden.. Male : Viral thodum thoorathilae.. Female : Viral thodum thoorathilae.. Male : Vennilavu kandukonden Female : Kandukonden kandukonden… Male : Kaadhal mugam kandukonden..
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் மகாலக்ஷ்மி அய்யர் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன் ஆண் : வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி ஆண் : வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி பெண் : என் கண் பார்த்தது என் கை சேருமோ ஆண் : கை சேராமலே கண்ணீர் சேருமோ பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் ஆண் : மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா பெண் : உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா ஆண் : உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் பெண் : மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன் பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன் ஆண் : கண்களைத் திறந்தும் கனவுகள் வளர்க்கும் காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும் பெண் : உன்னைத் தேடியே இனி எனது பயணமோ எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ ஆண் : ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஹே ஹேய்ய் காதல் முகம் கண்டுகொண்டேன் ஹே ஹேய்ய் ஆண் : விரல் தொடும் தூரத்திலே ஹே ஹேய்ய் வெண்ணிலவு கண்டுகொண்டேன் குழு : ………………………………………. ஆண் : ஆஆஆஆ… நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது பெண் : கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும் நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும் ஆண் : நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன் எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன் பெண் : ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன் ஆண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன் பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன் ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்… பெண் : காதல் முகம் கண்டுகொண்டேன் ஆண் : விரல் தொடும் தூரத்திலே… பெண் : விரல் தொடும் தூரத்திலே ஆண் : வெண்ணிலவு கண்டுகொண்டேன் பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன் ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்