← Back

Aasaiyenum Noolil Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Female : Than vaanathai theduthu oru nilavu Adhu varumoo varadhoo Than gaanathai theduthu oru veenai Adhu varumo varadhoo Female : Aasai ennum noolil aadi varum bommai Vaasa malar ingu vaaduvadhu unmai Aasai ennum noolil aadi varum bommai Vaasa malar ingu vaaduvadhu unmai Maaman magan illai maalaiyida solla Maaman magan illai maalaiyida solla Aththai magan illai anbu manam kolla Aththai magan illai anbu manam kolla Kaalam varum endru kaathirukkum indru Female : Aasai ennum noolil aadi varum bommai Vaasa malar ingu vaaduvadhu unmai Female : Moondru kani ondraai moodi veitha dhegam Moondru kani ondraai moodi veitha dhegam Paavalargal paarthu paadi veitha raagam En singaaram engindra sangeetham Ellorkkum sandhosam undaakalaam En mogangal aanandha logathai sandhikkum Yogathai undakkalaam En ullathil andraadum undaagum Porattam yaar kandathoo Female : Aasai ennum noolil aadi varum bommai Vaasa malar ingu vaaduvadhu unmai Male : Haaa….aaa…aa…haa…aaa…haa..aaa..aaa… Uyarathil utkaarnthu oruvan ezhudhugindraan Ezhudhi veitha naadagathil ellorum nadigindrom Nadithu muditha pinnae vedathai kalaikkindrom Vedthai kalaitha vudan paadathai marakkindrom Male : Kanneeril aadum en kaadhal odam Yaaralae indru oor sera koodum Kanneeril aadum en kaadhal odam Yaaralae indru oor sera koodum Nee aadum bothu naan ada kanden Un kannil yekkam nizhalaada kanden Male : En punaana nenjathai kannaana kannae Un kaikondu thaalattavaa En ullathai anbennum vellathil Ennaalum ooyaamal neerattavaa Nee nanjalli thandhaalum Thaen alli thandhaalum Naan unnuven Humming : ………………………..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : தன் வானத்தை தேடுது ஒரு நிலவு அது வருமோ வாராதோ தன் கானத்தை தேடுது ஒரு வீணை அது வருமோ வாராதோ பெண் : ஆசையெனும் நூலில் ஆடி வரும் பொம்மை வாச மலர் இன்று வாடுவது உண்மை ஆசையெனும் நூலில் ஆடி வரும் பொம்மை வாச மலர் இன்று வாடுவது உண்மை மாமன் மகன் இல்லை மாலையிட சொல்ல மாமன் மகன் இல்லை மாலையிட சொல்ல அத்தை மகன் இல்லை அன்பு மனம் கொள்ள அத்தை மகன் இல்லை அன்பு மனம் கொள்ள காலம் வரும் என்று காத்திருக்க இன்று பெண் : ஆசையெனும் நூலில் ஆடி வரும் பொம்மை வாச மலர் இன்று வாடுவது உண்மை பெண் : மூன்று கனி ஒன்றாய் மூடி வைத்த தேகம் மூன்று கனி ஒன்றாய் மூடி வைத்த தேகம் பாவலர்கள் பார்த்து பாடி வைத்த ராகம் என் சிங்காரம் என்கின்ற சங்கீதம் எல்லார்க்கும் சந்தோஷம் உண்டாக்கலாம் என் மோகங்கள் ஆனந்த லோகத்தை சந்திக்கும் யோகத்தை உண்டாக்கலாம் என் உள்ளத்தில் அன்றாடம் உண்டாகும் போராட்டம் யார் கண்டதோ பெண் : ஆசையெனும் நூலில் ஆடி வரும் பொம்மை வாச மலர் இன்று வாடுவது உண்மை ஆண் : ஹா…ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ…ஹா… உயரத்தில் உட்கார்ந்து ஒருவன் எழுதுகின்றான் எழுதி வைத்த நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நடித்து முடித்த பின்னே வேடத்தை கலைக்கின்றோம் வேடத்தை கலைத்தவுடன் பாடத்தை மறக்கின்றோம் ஆண் : கண்ணீரில் ஆடும் என் காதல் ஓடம் யாராலே இன்று ஊர் சேரக்கூடும் கண்ணீரில் ஆடும் என் காதல் ஓடம் யாராலே இன்று ஊர் சேரக்கூடும் நீ ஆடும்போது நான் ஆடக்கண்டேன் உன் கண்ணில் ஏக்கம் நிழலாடக் கண்டேன் ஆண் : என் புண்ணான நெஞ்சத்தை கண்ணான கண்ணே உன் கைக்கொண்டு தாலாட்டவா என் உள்ளத்தை அன்பென்னும் வெள்ளத்தில் எந்நாளும் ஓயாமல் நீராட்டவா நீ நஞ்சள்ளி தந்தாலும் தேன் அள்ளி தந்தாலும் நான் உண்ணுவேன் …………………………………….