← Back

Neerkumizho Song Lyrics

Singer : Sid Sriram Music by : Girishh Gopalakrishnan Lyrics by : Karthik Netha Male : Neerkumizho nedungkanavo Theeyinil veezhum ponthooral ivvaazhvo Yen pirivo edhu mudivo Neerinil moozhgum man bommaigal naamo Male : Osai illaamal uravum illaamal Oomai en nenjin thaalattum neeyo Thoodhum illaamal thanimai thaangamal Koondukkul moochuvidum thendral neeyo Male : Theeraadha kaatril Unai maaraadha netril Adaithenae thudithenae Azhagae oh.. oh.. Maayaadha nokkil Puyal oyaadha pokkil Alainthenae kumainthenae Uyirae oh.. oh.. Male : Haa…aaa…hoo oooo Yaar valaiyo evar iraiyo Iraichalin ullaadum paadalgal naamo Yaar pizhaiyo edhu sariyo Kaanalin neerukkul vinmeengal naamo Male : Vaanam sella Neeyum kettaayae Anbenum thoondil thanil Naan unnai maatti vaithen Viduthalai ketkiraai Valiyudan paarkkiraai Edhai edhai naan naan seiyya Male : Theeraadha kaatril Unai maaraadha netril Adaithenae thudithenae Azhagae oh.. oh.. Maayaadha nokkil Puyal oyaadha pokkil Alainthenae kumainthenae Uyirae oh.. oh.. Male : {Per isaiyae peru nilayae Eerangal kaayaatha yegaantham neeyae Mee mesaiyae migumathiyae Maarbinil maataadha vaasangal neeyae} (2) Male : Kaar irul melae Vizhum seeroli neeyae Unarndhenae unarndhenae Uyirae oh..
பாடகர் : சித்ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : நீர்குமிழோ நெடுங்கனவோ தீயினில் வீழும் பொன்தூறல் இவ்வாழ்வோ ஏன் பிரிவோ எது முடிவோ நீரினில் மூழ்கும் மண் பொம்மைகள் நாமோ ஆண் : ஓசை இல்லாமல் உறவும் இல்லாமல் ஊமை என் நெஞ்சின் தாலாட்டும் நீயோ தூதும் இல்லாமல் தனிமை தாங்காமல் கூண்டுக்குள் மூச்சுவிடும் தென்றல் நீயோ ஆண் : தீராத காற்றில் உனை மாறாத நேற்றில் அடைத்தேனே துடித்தேனே அழகே ஓ.. ஓ.. மாயாத நோக்கில் புயல் ஓயாத போக்கில் அலைந்தேனே குமைந்தேனே உயிரே ஓ.. ஓ.. ஆண் : ஹா ஆஅ ..ஹோ ஓ யார் வலையோ எவர் இரையோ இரைச்சலின் உள்ளாடும் பாடல்கள் நாமோ யார் பிழையோ எது சரியோ கானலின் நீருக்குள் விண்மீன்கள் நாமோ ஆண் : வானம் செல்ல நீயும் கேட்டாயே அன்பெனும் தூண்டில் தனில் நான் உன்னை மாட்டி வைத்தேன் விடுதலை கேட்கிறாய் வலியுடன் பார்க்கிறாய் எதை எதை நான் நான் செய்ய ஆண் : தீராத காற்றில் உனை மாறாத நேற்றில் அடைத்தேனே துடித்தேனே அழகே ஓ.. ஓ.. மாயாத நோக்கில் புயல் ஓயாத போக்கில் அலைந்தேனே குமைந்தேனே உயிரே ஓ.. ஓ.. ஆண் : {பேர் இசையே பெரு நிலையே ஈரங்கள் காயாத ஏகாந்தம் நீயே மீ மிசையே மிகுமதியே மார்பில் மாறாத வாசங்கள் நீயே} (2) ஆண் : கார் இருள் மேலே விழும் சீரொளி நீயே உணர்ந்தேனே உணர்ந்தேனே உயிரே ஓ..