← Back

Amma Endraal Anbu Song Lyrics

Singer : Jayalalithaa Music by : K. V. Mahadevan Female : { Amma endral anbu Appa endral arivu Aasaan endral kalvi Avarae ulagil deivam } (2) Female : { Annaiyai pillai Pillaiyai annai amma Endrae azhaipadhundu } (2) Female : { Anbin vilakam Panbin muzhakam Amma endroru sollil undu } (2) Female : { Pathu thingal Madi sumapaal pillai Petradhum thunbathai marapaal } (2) Female : Pathiyam irundhu Kaapaal than rathathai Paalaaki kodupaal Female : Amma endral anbu Appa endral arivu Aasaan endral kalvi Avarae ulagil deivam Female : { Iyarkai kodukum Selvathai ellam podhuvaai Vaithida vendum } (2) Female : { Illaathavarkum Irupavar thamakum Pagirndhae koduthida vendum} (2) Female : { Oruvarukaaga mazhaiyillai Oruvarukaaga nilavillai } (2) Varuvadhellam anaivarukum Vagudhae vaithaal vazhakillai Female : Amma endral anbu Appa endral arivu Aasaan endral kalvi Avarae ulagil deivam Female : { Mozhiyum naadum Mugathuku irandu vizhigal Aagum yendru } (2) Female : { Unarum podhu Unakum yenakum Nanmai yendrum undu } (2) Female : { Vaazhum uyiril Uyarvum thaazhvum Vaguthu vaipadhu paavam } (2) Female : Karunai konda Manidharellam kadavul Vadivam aagum Female : Amma endral anbu Appa endral arivu Aasaan endral kalvi Avarae ulagil deivam
பாடகி : ஜெயலலிதா இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : { அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம் } (2) பெண் : { அன்னையை பிள்ளை பிள்ளையை அன்னை அம்மா என்றே அழைப்பதுண்டு } (2) பெண் : { அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம் அம்மா என்றொரு சொல்லில் உண்டு } (2) பெண் : { பத்து திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள் } (2) பெண் : பத்தியமிருந்து காப்பாள் தன் ரத்தத்தை பாலாக்கி கொடுப்பாள் பெண் : அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம் பெண் : { இயற்கை கொடுக்கும் செல்வத்தை எல்லாம் பொதுவாய் வைத்திட வேண்டும் } (2) பெண் : { இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும் பகிர்ந்தே கொடுத்திட வேண்டும் } (2) பெண் : { ஒருவருக்காக மழை இல்லை ஒருவருக்காக நிலவில்லை } (2) வருவதெல்லாம் அனைவருக்கும் வகுத்தே வைத்தால் வழக்கில்லை பெண் : அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம் பெண் : { மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு விழிகள் ஆகும் என்று } (2) பெண் : { உணரும்போது உனக்கும் எனக்கும் நன்மை என்றும் உண்டு } (2) பெண் : { வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும் வகுத்து வைப்பது பாவம் } (2) பெண் : கருணை கொண்ட மனிதரெல்லாம் கடவுள் வடிவம் ஆகும் பெண் : அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்