← Back

Sudalamadappa Inke Song Lyrics

Singer : Ananthu Music by : Govind Vasantha Lyrics by : Karthik Netha Male : Ae… sodalamaadappaa inge Manusan yaarappaa Kelvi oru kelvi Pala naalaa irukke Male : Ae… ethiri yaarappaa nge Uravu yaarappaa Saami ada saami Perum paada irukke Male : Neethi katha kettu valarnththu ethukku Pallikalil paadam nooru ethukku Panaththil ulage suzhalum poluthu Karunai ethukku karumam ethukku Male : Thiyaagiyarin veettil enna irukku Varumaiyudan vasavum veruppum irukku Manidha manamo puluththu kedakku Paavam indha paasam mayangi kedakku Male : Kaasu irukkum idame thirukkoyil Mandhirangal ethukku verum vaayil Saami irukkum idaththil ellaam Undiyal valarnthirukku Male : Perarivin mannan enraalum Maanudaththin thozhan aanaalum Kaasu kurainthaal thesu kuraiyum Komanamum pagaiyaakum Male : Veedu vaasal vantha pinne Thevaigal theeraathe Paasam anbe pothum endraal Paiththiyam neethaane Male : Kaadhal nesam natpu ellaam Kaasidam jeyikkaathe Paadai aeri pokum pothum Panaththaasai pogaathe
பாடகர் : ஆனந்து இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : ஏ… சோடலமாடப்பா இங்கே மனுசன் யாரப்பா கேள்வி ஒரு கேள்வி பல நாளா இருக்கே ஆண் : ஏ… எதிர் யாரப்பா இங்கே உறவு யாரப்பா சாமி அட சாமி பெரும் பாடா இருக்கே ஆண் : நீதி கதை கேட்டு வளர்ந்தது எதுக்கு பள்ளிகளில் பாடம் நூறு எதுக்கு பணத்தில் உலகே சுழலும் போது கருணை எதுக்கு கருமம் எதுக்கு ஆண் : தியாகியரின் வீட்டில் என்ன இருக்கு வருமையுடன் வசவும் வெறுப்பும் இருக்கு மனித மனமோ புழுத்து கெடக்கு பாவம் இந்த பாசம் மயங்கி கெடக்கு ஆண் : காசு இருக்கும் இடமே திருக்கோயில் மந்திரங்கள் எதுக்கு வெறும் வாயில் சாமி இருக்கும் இடத்தில் எல்லாம் உண்டியல் வளர்ந்திருக்கு ஆண் : பேரறிவின் மன்னன் என்றாலும் மானுடத்தின் தோழன் ஆனாலும் காசு குறைந்தால் தேசு குறையும் கோமணமும் பகையாகும் ஆண் : வீடு வாசல் வந்த பின்னே தேவைகள் தீராதே பாசம் அன்பே போதும் என்றால் பைத்தியம் நீதானே ஆண் : காதல் நேசம் நட்பு எல்லாம் காசிடம் ஜெயிக்காதே பாடை ஏறி போகும் போது பணத்தாசை போகாதே