← Back

Mappillai Sirukku Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : T. M. Soundararajan Lyrics by : Vaali Male : Maappillai sirkku vaazhththukkal Sila manimozhi solvaen kettukko Maadaai uzhaippathu un bharam Adhai lesaai ninaippathu samsaaram Male : Maappillai sirkku vaazhththukkal Sila manimozhi solvaen kettukko Female : Mangala pennukku vaazhththukkal Sila manimozhi solvaen kettukko Veettai kaappathu pen paadu Idhai kaattilumaa intha aanpaadu…. Female : Mangala pennukku vaazhththukkal Sila manimozhi solvaen kettukko Male : Yaenadi pennae thaamarai kannae Ennidam intha veeraappu Kaalaiyar seiyyum kaariyam yaavum Kaniyar seithaal pollaappu Male : Pennmai poovin jaathi endraanathu Menmai maari ponaal ennaavathu nee Pani vizhi mayangida kani mozhi pazhagidum Kili mozhiyinam ena puriyaatho… Male : Maappillai sirkku vaazhththukkal Sila manimozhi solvaen kettukko Female : Paavaiyar endraal kevalam endru Pottikku vanthaal vaarungal Paavaiyar endraal kevalam endru Pottikku vanthaal vaarungal Aduppadi poona jeyippathu aanai Nadappathai mudivil paarungal Female : Deivam meniyil paathi pen kondathu Ungal sakthi yaavum yaar thanthathu Intha paramparai kathaigalai purinthavar therinthavar Vambukkum thumbukkum varalaamo Female : Mangala pennukku vaazhththukkal Sila manimozhi solvaen kettukko Male : Beemanum nalanum pengalai polae Samaiyal seithu pereduththaar Senaiyum nadaththi paanaiyum piththa Jaathikku iniyo penn kulaththaar Female : Mangai kannil undu vel enbathu Veeram illai endru yaar sonnathu Male : Idhil unakkulla perumaiyum Enakkulla thiramaiyum Avaravar manathukku theriyaatho Female : Idhai varugindra kalangal Mudivurai vazhangattum Poovaiyar menmaigal puriyaatho Male : Theriyaatho….. Female : Puriyaatho… Male : Theriyaatho…..oo…… Female : Puriyaatho…oo……
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. எம். சௌந்தரராஜன் பாடலாசிரியர் : வாலி ஆண் : மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துக்கள் சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ மாடாய் உழைப்பது உன் பாரம் அதை லேசாய் நினைப்பது சம்சாரம்…… ஆண் : மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துக்கள் சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ பெண் : மங்கலப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ வீட்டைக் காப்பது பெண் பாடு இதை காட்டிலுமா இந்த ஆண் பாடு…. பெண் : மங்கலப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ ஆண் : ஏனடி பெண்ணே தாமரைக் கண்ணே என்னிடம் இந்த வீராப்பு காளையர் செய்யும் காரியம் யாவும் கன்னியர் செய்தால் பொல்லாப்பு ஆண் : பெண்மை பூவின் ஜாதி என்றானது மென்மை மாறிப் போனால் என்னாவது நீ பனி விழி மயங்கிட கனி மொழி பழகிடும் கிளி மொழியினம் என புரியாதோ…. ஆண் : மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துக்கள் சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ பெண் : பாவையர் என்றால் கேவலம் என்று போட்டிக்கு வந்தால் வாருங்கள் பாவையர் என்றால் கேவலம் என்று போட்டிக்கு வந்தால் வாருங்கள் அடுப்படி பூனை ஜெயிப்பது ஆணை நடப்பதை முடிவில் பாருங்கள் பெண் : தெய்வம் மேனியில் பாதி பெண் கொண்டது உங்கள் சக்தி யாவும் யார் தந்தது இந்த பரம்பரை கதைகளை புரிந்தவர் தெரிந்தவர் வம்புக்கும் தும்புக்கும் வரலாமோ….. பெண் : மங்கலப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ ஆண் : பீமனும் நளனும் பெண்களைப் போலே சமையல் செய்து பேரெடுத்தார் சேனையும் நடத்தி பானையும் பிடித்த ஜாதிக்கு இணையோ பெண் குலத்தார் பெண் : மங்கை கண்ணில் உண்டு வேல் என்பது வீரம் இல்லை என்று யார் சொன்னது ஆண் : இதில் உனக்குள்ள பெருமையும் எனக்குள்ள திறமையும் அவரவர் மனதுக்கு தெரியாதோ…. பெண் : இதை வருகின்ற காலங்கள் முடிவுரை வழங்கட்டும் பூவையர் மேன்மைகள் புரியாதோ ஆண் : தெரியாதோ…….. பெண் : புரியாதோ….. ஆண் : தெரியாதோ…..ஓ…. பெண் : புரியாதோ…..ஓ….