← Back

Endha Neramum Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : L. Vaidyanathan Male : Entha neramum nin maiyal yaeruthadee Kuravallee….siru kalli….. Entha neramum nin maiyal yaeruthadee Male : Intha neraththilae malaivaaraththilae Nadhiyoraththilae unai koodi Nindran veera tamizh sollin saaraththilae Manam mikka magizhchi kondaadi Male : Kuzhal paaraththilae idhzheeraththilae Mulaiyoraththilae anbu soodi Nenjam aara thazhuvi amara nilai pettrathan Payanai indru kaanbaen Male : Entha neramum nin maiyal yaeruthadee Kuravallee….siru kalli….. Entha neramum nin maiyal yaeruthadee Male : Vattangal ittum kulamagalaatha Manang perunth theppaththai pola Ninai vittu vittu pala leelaigal seithu Nin meanithanai vidalindri Male : Adi ettu dhisaiyum olirthidung kaalai Iraviyai pondra mugaththaai Muththam ittu pala muththamittu palamuththam Ittunai saernthida vanthaen Male : Entha neramum nin maiyal yaeruthadee Kuravallee….siru kalli….. Entha neramum nin maiyal yaeruthadee
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ குறவள்ளீ……சிறு கள்ளி….. எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ ஆண் : இந்த நேரத்திலே மலைவாரத்திலே நதியோரத்திலே உனைக் கூடி நின்றன் வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி ஆண் : குழல் பாரத்திலே இதழீரத்திலே முலையோரத்திலே அன்பு சூடி நெஞ்சம் ஆரத் தழுவி அமர நிலை பெற்றதன் பயனை இன்று காண்பேன் ஆண் : எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ குறவள்ளீ……சிறு கள்ளி….. எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ ஆண் : வட்டங்கள் இட்டும் குளமகலாத மணங்ப்பெருந் தெப்பத்தைப் போல நினை விட்டு விட்டுப் பல லீலைகள் செய்து நின் மேனிதனை விடலின்றி ஆண் : அடி எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை இரவியைப் போன்ற முகத்தாய் முத்தம் இட்டுப் பல முத்தமிட்டுப் பலமுத்தம் இட்டுனைச் சேர்ந்திட வந்தேன் ஆண் : எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ குறவள்ளீ……சிறு கள்ளி….. எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ