← Back

Aaraaro Paada Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vaali Male : Aaraaro paada ingu thaayumillai Unai alli chellam konja yaarumillai Nee mannil vanthathikka Unnai yaarum ondrum ketkavillai Vithi kannai moodikondu Theruvil erinthathoru vaanavillai Male : En anbe en amuthae Intha kaayam aarividum thoongu En kannae en maniyae Unnai thannanthaniyae nee thaangu Male : Aaraaro paada ingu thaayumillai Unai alli chellam konja yaarumillai Male : Kadavulin uruvam edhuvena Mazhalai sirippilae ariya vaikindraai Saetrilae valantha thaamarai Malarai polavey nee thondrinaai Male : Bhoomiyithu punithamillai Aayiram asuthangal ullathu Theeyilumae neenthi vara Nee indru kattrukol nallathu Male : Intha ulagam enbathu Inba thunbam ulla pathaiyadaa Nee muttimothi ezha Vazhigal sollitharum geedhaiyada Male : Aaraaro paada ingu thaayumillai Unai alli chellam konja yaarumillai Male : Nadhiyilae vizhuntha ilaiyena Unathu payanagal thodanthu pogattum Alaivarum adutha thiruppathil Unathu karai edhirilae thondridum Male : Vaer engo sedi engo Nee ingae thaniyaai pookkiraai Vazhi thavari veettil vantha Paravaiyai polavae paarkkiraai Male : Nee kadavul ezhuthi vaitha Mannil vantha kavithaiyadaa Adhan idaiyil iru uyirgal Seitha ezhuthupizhai paavamadaa Male : Aaraaro paada ingu thaayumillai Unai alli chellam konja yaarumillai Nee mannil vanthathikka Unnai yaarum ondrum ketkavillai Vithi kannai moodikondu Theruvil erinthathoru vaanavillai Male : Aaraaro paada ingu thaayumillai Unai alli chellam konja yaarumillai
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை நீ மண்ணில் வந்துதிக்க உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை விதி கண்ணை மூடிக்கொண்டு தெருவில் எறிந்ததொரு வானவில்லை ஆண் : என் அன்பே என் அமுதே இந்த காயம் ஆறிவிடும் தூங்கு என் கண்ணே என் மணியே உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை ஆண் : கடவுளின் உருவம் எதுவென மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய் சேற்றிலே வளர்ந்த தாமரை மலரைப் போலவே நீ தோன்றினாய் ஆண் : பூமியிது புனிதமில்லை ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது தீயிலுமே நீந்தி வர நீ இன்று கற்றுக்கொள் நல்லது ஆண் : இந்த உலகம் என்பது இன்ப துன்பம் உள்ள பாதையடா நீ முட்டிமோதி எழ வழிகள் சொல்லித்தரும் கீதையடா ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை ஆண் : நதியிலே விழுந்த இலையென உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும் அலைவரும் அடுத்த திருப்பத்தில் உனது கரை எதிரிலே தோன்றிடும் ஆண் : வேர் எங்கோ செடி எங்கோ நீ இங்கே தனியாய் பூக்கிறாய் வழி தவறி வீட்டில் வந்த பறவையைப் போலவே பார்க்கிறாய் ஆண் : நீ கடவுள் எழுதி வைத்த மண்ணில் வந்த ஒரு கவிதையடா அதன் இடையில் இரு உயிர்கள் செய்த எழுத்துப்பிழை பாவமடா ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை நீ மண்ணில் வந்துதிக்க உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை விதி கண்ணை மூடிக்கொண்டு தெருவில் எறிந்ததொரு வானவில்லை ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை