← Back

Odi Konde Iruppen Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male : Odraa odraa odraa…hahahaha Male : Odi konde iruppen Indha ulagam suzhalvathu nirkkum varai Naan odi konde iruppen Male : Aadi kondirukkum kadal alaigal Isai paadi kondirukkum poonguyilgal Odi kondirukkum megangal Enai thedi kondirupadhai naan ariven Male : Odi konde iruppen Indha ulagam suzhalvathu nirkkum varai Naan odi konde iruppen Male : Odraa odraa odraa… Male : Kadarkarai iruppadhu kaadhalukka Oru kaadhali varuvadhu vedhanaikka Adikkadi sirippadhu baavanaikka Unnai aandavan padaithathu sodhanaikka Hahahahaha… Male : Maaligai paarungal vaan alavu Adhil manasugal paarungal kadukualavu Aandavan koduthathu oralavu Idhil avan avan thirudiyathevalavu Male : Odi konde iruppen Indha ulagam suzhalvathu nirkkum varai Naan odi konde iruppen Male : Odraa odraa odraa… Male : Paadhaiyil pogindra paavigala Neengal padaithavan anuppiya aavigala Bodhaiyil irukkindra saamigala Indha boomiyil naangal oomaigala Male : Engengum manidhargal surusuruppu Porul irukko illaiyo paraparappu Ellorkkum pidithathu paithiyama Ada enakkenna naan thaan vaithiyana Hahahahaha Male : Kadavulai konjam thedungada Avan kaadhali peyarai kelungada Kadavulin kaadhalum tholviyada Avan kandathum boomiyil keliyada Male : Odi konde iruppen Indha ulagam suzhalvathu nirkkum varai Naan odi konde iruppen Male : Odraa odraa odraa…
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஓட்ராறா……….ஓட்ராறா…….ஓட்ராறா..ஹாஹாஹாஹா ஆண் : ஓடிக் கொண்டே இருப்பேன் இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான் ஓடிக் கொண்டே இருப்பேன்……. ஆண் : ஆடிக் கொண்டிருக்கும் கடலலைகள் இசை பாடிக் கொண்டிருக்கும் பூங்குயில்கள் ஓடிக் கொண்டிருக்கும் மேகங்கள் எனை தேடிக் கொண்டிருப்பதை நானறிவேன் ஆண் : ஓடிக் கொண்டே இருப்பேன் இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான் ஓடிக் கொண்டே இருப்பேன்……. ஆண் : ஓட்ராறா……….ஓட்ராறா…….ஓட்ராறா ஆண் : கடற்கரை இருப்பது காதலுக்கா ஒரு காதலி வருவது வேதனைக்கா அடிக்கடி சிரிப்பது பாவனைக்கா உன்னை ஆண்டவன் படைத்தது சோதனைக்கா ஹாஹாஹாஹா ஆண் : மாளிகை பாருங்கள் வானளவு அதில் மனசுகள் பாருங்கள் கடுகளவு ஆண்டவன் கொடுத்தது ஓரளவு இதில் அவனவன் திருடியதெவ்வளவு……. ஆண் : ஓடிக் கொண்டே இருப்பேன் இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான் ஓடிக் கொண்டே இருப்பேன்……. ஆண் : ஓட்ராறா……….ஓட்ராறா…….ஓட்ராறா.. ஆண் : பாதையில் போகின்ற பாவிகளா நீங்கள் படைத்தவன் அனுப்பிய ஆவிகளா போதையில் இருக்கின்ற சாமிகளா இந்த பூமியில் நாங்கள் ஊமைகளா ஆண் : எங்கெங்கும் மனிதர்கள் சுறுசுறுப்பு பொருள் இருக்கோ இல்லையோ பரபரப்பு எல்லோர்க்கும் பிடித்தது பைத்தியமா அட எனக்கென்ன நான்தான் வைத்தியனா ஹாஹாஹாஹா … ஆண் : கடவுளைக் கொஞ்சம் தேடுங்கடா அவன் காதலி பெயரை கேளுங்கடா கடவுளின் காதலும் தோல்வியடா அவன் கண்டதும் பூமியில் கேலியடா…. ஆண் : ஓடிக் கொண்டே இருப்பேன் இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான் ஓடிக் கொண்டே இருப்பேன்……. ஆண் : ஓட்ராறா……….ஓட்ராறா…….ஓட்ராறா..