← Back

Kadavulum Neeyum Oru Song Lyrics

Singers : S. Janaki and K. J. Yesudas Music by : Soundaryan Lyrics by : Vairamuthu Female : Hey thaananaanaa thaananaanaa thananaanaa Hey thananaanaa thananaanaa thananaanaa Hey thananaanaa thananaanaa thananaanaa Male : Kadavulum neeyum oru thaaipillai Iruvarum thanimaram thaanae Avanukkum unakuum annai illai Athanaal oorinam thaanae Nadhi endraal nurai undu Vaazhvendral kurai undu Female : Aipasi vandhaal adaimazhai kaalam Silar aayul muzhuthum aipasi maatham Male : Kadavulum neeyum oru thaaipillai Iruvarum thanimaram thaanae Avanukkum unakuum annaiillai Athanaal verinam thaanae Male : Androru naal chinna pillayilae Un thaai erindhaal sondha kolliyilae Vendhuvittaai chinna pinjinilae Patta vadu innum nenjinilae Male : Thaaimai illaamal yaarum ingillai Garbam illaamal kadavul ingillai Thaaipaalai pola theertham vaerillai Aval vaai sollai pola vedham vaerillai Male : Kadavulum neeyum oru thaaipillai Iruvarum thanimaram thaanae Avanukkum unakuum annai illai Athanaal verinam thaanae Nadhiendraal nurai undu Vaazhvendraal kurai undu Humming : …………….. Male : Thee irundhal angae pugaiirukkum Uravirunthal konjam pagaiyirukkum Kadalinrunthaal engo karairukkum Kathaiirunthaal edho mudivirukkum Male : Vaazhvum varaamal saavum naerammal Rendum illamaal mannil vaazhgindraai Penmai kandalae thaaimai kaangindraai Palar poojai kondaadum poovaai vaazhgindraai Female : Anbulla maganae azhuthathu podhum Punnagai sindhu idhu ini pookalin maatham Male : Kadavulum neeyum oru thaaipillai Iruvarum thanimaram thaanae Avanukkum unakuum annai illai Athanal verinam thaanae Nadhiendraal nurai undu Vaazhvendraal kurai undu
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : சௌந்தர்யன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து குழு : ஹே..தனனானா தனனானா ஹே..தனனானா தனனானா தனனானா ஹே..தனனானா தனனானா ஹே..தனனானா தனனானா தனனானா ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை இருவரும் தனிமரம் தானே அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை அதனால் ஓரினம் தானே நதியென்றால் நுரை உண்டு வாழ்வென்றால் குறை உண்டு பெண் : ஐப்பசி வந்தால் அடைமழை காலம் சிலர் ஆயுள் முழுதும் ஐப்பசி மாதம் ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை இருவரும் தனிமரம் தானே அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை அதனால் ஓரினம் தானே ஆண் : அன்றொரு நாள் சின்னப்பிள்ளையிலே உன் தாய் எரிந்தாள் சொந்தக் கொள்ளியிலே வெந்துவிட்டாய் சின்னப் பிஞ்சினிலே பட்ட வடு இன்னும் நெஞ்சினிலே ஆண் : தாய்மை இல்லாமல் யாரும் இங்கில்லை கர்ப்பம் இல்லாமல் கடவுள் இங்கில்லை தாய்ப்பாலை போல தீர்த்தம் வேறில்லை அவள் வாய் சொல்லை போல வேதம் வேறில்லை ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை இருவரும் தனிமரம் தானே அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை அதனால் ஓரினம் தானே நதியென்றால் நுரை உண்டு வாழ்வென்றால் குறை உண்டு பெண் : ஓஓஓஒ….ஓஓஓஒ…. ஆண் : தீயிருந்தால் அங்கே புகையிருக்கும் உறவிருந்தால் கொஞ்சம் பகையிருக்கும் கடலிருந்தால் எங்கோ கரையிருக்கும் கதையிருந்தால் ஏதோ முடிவிருக்கும் ஆண் : வாழ்வும் வாராமல் சாவும் நேராமல் ரெண்டும் இல்லாமல் மண்ணில் வாழ்கின்றாய் பெண்மை கண்டாலே தாய்மை காண்கின்றாய் பலர் பூஜை கொண்டாடும் பூவாய் வாழ்கின்றாய் பெண் : அன்புள்ள மகனே அழுதது போதும் புன்னகை சிந்து இனி பூக்களின் மாதம் ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை இருவரும் தனிமரம் தானே அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை அதனால் ஓரினம் தானே நதியென்றால் நுரை உண்டு வாழ்வென்றால் குறை உண்டு….