← Back

Padagu Veedugalil Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Humming : ……………. Male : Padagu veedugalil pachai kiligal Paruva kadhaigalai paadudhamma Female : Paniyin porvaigalil pattu malargal Azhagu nadanangal aadudhamma Male : Padagu veedugalil pachai kiligal Paruva kadhaigalai paadudhamma Female : Paniyin porvaigalil pattu malargal Azhagu nadanangal aadudhamma Male : Iyarkai raajangam engum Female : Inikkum sangeedham pongum Male : Kashmirum kankavarum kaatchigalin ponnkaram Kaarkaala megangal oorgolam angangae Female : Aagaayam neela niram adhu polae poonguzhalum Kaattrodu poraadum seeraadum enanbae Male : Mayakkam undaakkum annam Female : Pirakkum ullasa ennam Male : Padagu veedugalil pachai kiligal Paruva kadhaigalai paadudhamma Female : Paniyin porvaigalil pattu malargal Azhagu nadanangal aadudhamma Male : Aanandha solaiyil maalaiyil Naanum ilamanum konja Female : Aarambha velaiyil leeliayil Kaalum idai noolum kenja Male : Aanandha solaiyil maalaiyil Naanum ilamanum konja Female : Aarambha velaiyil leeliayil Kaalum idai noolum kenja Male : Mogathai thangaadha mangai angangal Female : Thegtahil thondratha mannan sinnangal Male : Ninaithu paarthaalae inbam Female : Nerungi kettalae naanam Male : Padagu veedugalil pachai kiligal Paruva kadhaigalai paadudhamma Female : Paniyin porvaigalil pattu malargal Azhagu nadanangal aadudhamma Male : Vanathu devathai pol oru thogai Ilam thogai vandhaal Female : Vaiyathu kaaviya naayagan needhaan Thunai naan thaan endraan Male : Kaamathu paal sindhum thanga kinnangal Female : Thazhampoo pol minnum manjal kannangal Male : Udhattil thaenoorum angae Female : Kodukkathaan yengum ingae Male : Padagu veedugalil pachai kiligal Paruva kadhaigalai paadudhamma Female : Paniyin porvaigalil pattu malargal Azhagu nadanangal aadudhamma
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி முனங்கல் : ……………….. ஆண் : படகு வீடுகளில் பச்சை கிளிகள் பருவக் கதைகளை பாடுதம்மா பெண் : பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள் அழகு நடனங்கள் ஆடுதம்மா… ஆண் : படகு வீடுகளில் பச்சை கிளிகள் பருவக் கதைகளை பாடுதம்மா பெண் : பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள் அழகு நடனங்கள் ஆடுதம்மா…( ஆண் : இயற்கை ராஜாங்கம் எங்கும் பெண் : இனிக்கும் சங்கீதம் பொங்கும்…… ஆண் : காஷ்மீரம் கண்கவரும் காட்சிகளின் பொன்னகரம் கார்கால மேகங்கள் ஊர்கோலம் அங்கங்கே பெண் : ஆகாயம் நீல நிறம் அதுபோலே பூங்குழலும் காற்றோடு போராடும் சீராடும் என் அன்பே ஆண் : மயக்கம் உண்டாக்கும் அன்னம் பெண் : பிறக்கும் உல்லாச எண்ணம்….. ஆண் : படகு வீடுகளில் பச்சை கிளிகள் பருவக் கதைகளை பாடுதம்மா பெண் : பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள் அழகு நடனங்கள் ஆடுதம்மா.. ஆண் : ஆனந்த சோலையில் மாலையில் நானும் இளமானும் கொஞ்ச பெண் : ஆரம்ப வேளையில் லீலையில் காலும் இடை நூலும் கெஞ்ச ஆண் : ஆனந்த சோலையில் மாலையில் நானும் இளமானும் கொஞ்ச பெண் : ஆரம்ப வேளையில் லீலையில் காலும் இடை நூலும் கெஞ்ச ஆண் : மோகத்தை தாங்காத மங்கை அங்கங்கள் பெண் : தேகத்தில் தோன்றாத மன்னன் சின்னங்கள் ஆண் : நினைத்துப் பார்த்தாலே இன்பம் பெண் : நெருங்கி கேட்டாலே நாணம்…. ஆண் : படகு வீடுகளில் பச்சை கிளிகள் பருவக் கதைகளை பாடுதம்மா பெண் : பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள் அழகு நடனங்கள் ஆடுதம்மா.. ஆண் : வானத்து தேவதை போலொரு தோகை இளம் தோகை வந்தாள் பெண் : வையத்து காவிய நாயகன் நீதான் துணை நான்தான் என்றான் ஆண் : காமத்து பால் சிந்தும் தங்கக் கிண்ணங்கள் பெண் : தாழம்பூ போல் மின்னும் மஞ்சள் கன்னங்கள் ஆண் : உதட்டில் தேனூறும் அங்கே பெண் : கொடுக்கத்தான் எங்கும் எங்கே….. ஆண் : படகு வீடுகளில் பச்சை கிளிகள் பருவக் கதைகளை பாடுதம்மா பெண் : பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள் அழகு நடனங்கள் ஆடுதம்மா..