← Back

Yenn Indha Paarvaigal Duet Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Saindhavi Music by : G. V. Prakash Kumar Male : Yen indha paarvaigal Yen intha mounangal Nenjukull kaatrinmai undakutho Male : Yen indha vaarthaigal Yen indha vaasanai Nenjukkull pei puyal undakutho Female : Kaadhugal moodum podhinilum Moolaikul odum paadal ondraai Ullathai moodi vaithirunthen Nee mattum eppadi ullae sendraai Male : En noolum nee aanaai En vaanam nee aanaai Kaatraadi aanen adi Aanen adi Male : Yen indha paarvaigal Yen intha mounangal Nenjukull kaatrinmai undakutho Female : Vannam maaradha oviyamaai Ennai aangaangae kaatugiraai Eeram kaindhaalum bathiramaai En bimbam yaavum pootugiraai Male : Pinnae odidum kaatchiyellaam Minnal vegathil maatrugiraai Kannukull ennai ulliluthu En vaazhvai pulli aakugiraai Male : Ennai naan kaakka Varainthiruntha Maaya kodondrai neekkugiraai Ithu mei endro poi endro Yosikkum mun enthan Aiyaththai pokkugiraai pokkugiraai Male : Thevai illaatha vetkam ellaam Neram paarkaamal kollugiren Naan orr aan endra unmai kandu Angae ennai naan killugiren Male : Kaadhal natpukku mathiyilae Nenjam pendulum aadumadi Thottum theendaamal pesaiyilae Vinaadi nindru odumadi Female : Innum oriru nodigalilae Mutham nan vaikka koodumada Ohho en enna kuttaikkul Un bimbam vaazhathaan Kal ondrai pottaaiyada Female : Yen indha paarvaigal Yen intha mounangal Nenjukull kaatrinmai undakutho Female : Yen indha vaarthaigal Yen indha vaasanai Nenjukkull pei puyal undakutho Female : Kaadhugal moodum podhinilum Moolaikul odum paadal ondraai Male & Female : Ullathai moodi vaithirunthen Nee mattum eppadi ullae sendraai Male & Female : En noolum nee aanaai En vaanam nee aanaai Kaatraadi aanen adi (aanen ada)
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஏன் இந்த பார்வைகள் ஏன் இந்த மௌனங்கள் நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ ஆண் : ஏன் இந்த வார்த்தைகள் ஏன் இந்த வாசனை நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ பெண் : காதுகள் மூடும் போதினிலும் மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய் உள்ளத்தை மூடி வைத்திருந்தேன் நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய் ஆண் : என் நூலும் நீ ஆனாய் என் வானம் நீ ஆனாய் காற்றாடி ஆனேனடி ஆண் : ஏன் இந்த பார்வைகள் ஏன் இந்த மௌனங்கள் நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ பெண் : வண்ணம் மாறாத ஓவியமாய் என்னை ஆங்காங்கே காட்டுகிறாய் ஈரம் காய்ந்தாலும் பத்திரமாய் என் பிம்பம் யாவும் பூட்டுகிறாய் ஆண் : பின்னே ஓடிடும் காட்சியெல்லாம் மின்னல் வேகத்தில் மாற்றுகிறாய் கண்ணுக்குள் என்னை உள்ளிழுத்து என் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய் ஆண் : என்னை நான் காக்க வரைந்திருந்த மாய கோடொன்றை நீக்குகிறாய் இது மெய்யென்றோ பொய்யென்றோ யோசிக்கும் முன் எந்தன் ஐயத்தை போக்குகிறாய் ஆண் : தேவை இல்லாத வெட்கமெல்லாம் நேரம் பார்க்காமல் கொள்ளுகிறேன் நான் ஓர் ஆண் என்று உண்மை கண்டு அங்கே என்னை நான் கிள்ளுகிறேன் ஆண் : காதல் நட்புக்கு மத்தியிலே நெஞ்சம் பெண்டூலம் ஆகுமடி தொட்டும் தீண்டாமல் பேசயிலே வினாடி நின்று ஓடுமடி பெண் : இன்னும் ஓரிரு நொடிகளிலே முத்தம் நான் வைக்க கூடுமடா ஓஹ்ஹோ என்னென்ன குட்டைக்குள் உன் பிம்பம் ஆடத்தான் கல் ஒன்றை போட்டாய்யடா பெண் : ஏன் இந்த பார்வைகள் ஏன் இந்த மௌனங்கள் நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ பெண் : ஏன் இந்த வார்த்தைகள் ஏன் இந்த வாசனை நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ பெண் : காதுகள் மூடும் போதினிலும் மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய் ஆண் மற்றும் பெண் : உள்ளத்தை மூடி வைத்திருந்தேன் நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய் ஆண் மற்றும் பெண் : என் நூலும் நீ ஆனாய் என் வானம் நீ ஆனாய் காற்றாடி ஆனேன(டி)டா