← Back

Omena Olippathu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus : Om om om om om…. Male : Omena olippathu ongaara naatham Omena olippathu ongaara naatham Adhai aamena uraippathu naal vagai vedham Thaamena ninaikkum tharukkarai adakkum Thaamena ninaikkum tharukkarai adakkum Omena thudhikkum devi un paatham Chorus : Om om om…. Male : Omena olippathu ongaara naatham Male : Panneer abishegam seitha perukku Vaazhvin kanneerai maattri vaikkum karumaari Female : Nalla paalaal abhishegam seitha perukku Inbam paalaattam ponga vaikkum karumaari Male : Thiruneeraal abhishegam seitha perukku Thunbam neeraaga poga vaikkum karumaari Female : Konda kungumaththaal abhishegam seitha perukku Nettri kungumaththai nilaikka vaikkum karumaari Male : Nalla santhanaththaal Abhishegam seitha perukku Nenjam santhanam pol manakka vaikkum karumaari Female : Thooya manjal neeril abhishegam seitha perukku Thaali manjalukku kaaval nirkkum karumaari Thooya manjal neeril abhishegam seitha perukku Thaali manjalukku kaaval nirkkum karumaari Male : Endrum bakthikkum endrum bakthikku Bakthiyodu abhishegam seitha perukku Both : Dheiva sakthi vanthu sera vaikkum karumari Female : Naakkaadu pala poigal namai vittu poga Nokkaadu theernthu ullam nalamenbathaaga Naakkaadu pala poigal namai vittu poga Nokkaadu theernthu ullam nalamenbathaaga Male : Theekkaadu pol pattrum theemaigal azhiya Theekkaadu pol pattrum theemaigal azhiya Vekkaadu pol vaattum vinai muttrum ozhiya Male : Saakkaadu pol soozhum saabangal tholaiya Saakkaadu pol soozhum saabangal tholaiya Pookkaadu pol inbam pozhuthodu vilaiya Female : Verkkaadu thanai meavi vaazhgindra devi Verkkaadu thanai meavi vaazhgindra devi Venthaamarai paatham vandaaga moippom Both : Venthaamarai paatham vandaaga moippom Chorus : Omsakthi omsakthi omsakthi om Omsakthi omsakthi omsakthi om Omsakthi omsakthi omsakthi om…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்…… ஆண் : ஓமென ஒலிப்பது ஓங்கார நாதம் ஓமென ஒலிப்பது ஓங்கார நாதம் அதை ஆமென உரைப்பது நால் வகை வேதம் தாமென நினைக்கும் தருக்கரை அடக்கும் தாமென நினைக்கும் தருக்கரை அடக்கும் ஓமென துதிக்கும் தேவி உன் பாதம் குழு : ஓம் ஓம் ஓம்……. ஆண் : ஓமென ஒலிப்பது ஓங்கார நாதம் ஆண் : பன்னீர் அபிஷேகம் செய்த பேருக்கு வாழ்வின் கண்ணீரை மாற்றி வைக்கும் கருமாரி பெண் : நல்ல பாலால் அபிஷேகம் செய்த பேருக்கு இன்பம் பாலாட்டம் பொங்க வைக்கும் கருமாரி ஆண் : திருநீரால் அபிஷேகம் செய்த பேருக்கு துன்பம் நீராக போக வைக்கும் கருமாரி பெண் : கொண்ட குங்குமத்தால் அபிஷேகம் செய்த பேருக்கு நெற்றி குங்குமத்தை நிலைக்க வைக்கும் கருமாரி ஆண் : நல்ல சந்தனத்தால் அபிஷேகம் செய்த பேருக்கு நெஞ்சம் சந்தனம் போல் மணக்க வைக்கும் கருமாரி பெண் : தூய மஞ்சள் நீரில் அபிஷேகம் செய்த பேருக்கு தாலி மஞ்சளுக்கு காவல் நிற்கும் கருமாரி தூய மஞ்சள் நீரில் அபிஷேகம் செய்த பேருக்கு தாலி மஞ்சளுக்கு காவல் நிற்கும் கருமாரி ஆண் : என்றும் பக்திக்கு என்றும் பக்திக்கு பக்தியோடு அபிஷேகம் செய்த பேருக்கு இருவர் : தெய்வ சக்தி வந்து சேர வைக்கும் கருமாரி பெண் : நாக்காடு பல பொய்கள் நமை விட்டு போக நோக்காடு தீர்ந்து உள்ளம் நலமென்பதாக நாக்காடு பல பொய்கள் நமை விட்டு போக நோக்காடு தீர்ந்து உள்ளம் நலமென்பதாக ஆண் : தீக்காடு போல் பற்றும் தீமைகள் அழிய தீக்காடு போல் பற்றும் தீமைகள் அழிய வேக்காடு போல் வாட்டும் வினை முற்றும் ஒழிய ஆண் : சாக்காடு போல் சூழும் சாபங்கள் தொலைய சாக்காடு போல் சூழும் சாபங்கள் தொலைய பூக்காடு போல் இன்பம் பொழுதோடு விளைய பெண் : வேற்காடு தனை மேவி வாழ்கின்ற தேவி வேற்காடு தனை மேவி வாழ்கின்ற தேவி வெண்தாமரை பாதம் வண்டாக மொய்ப்போம்…. இருவர் : வெண்தாமரை பாதம் வண்டாக மொய்ப்போம்….ஓம்.. குழு : ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்…… ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்