← Back

Thaaya Thaarama Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male : Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa Male : Thaai veru thaaram veru pengalthaanadaa Aanaalum rendum rendu kangalthaanadaa Male : Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa Male : Thaali katti kondava thaaramendru vathava Thakka thunaiyaavaalae ennaalumthaan Kondavanai kaappava kuttram kurai theerppava Illaraththin aadhaaram samsaramthaan Male : Kai niraiya soriduvaal kannuranga paayiduval Naayaganin per vilanga nalla pillai eendriduvaal Samsaaram ilaiyae santhosham yaedhadaa Sanyaasi thaanadaa…. Male : Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa…. Male : Pillai varam kettava peththeduththu pottava thottilittu thaalaatti paaloottinaal Eththanaiyo raththiri patta pagal madhiri Kann muzhichchi naalthorum aalaakkinaal Male : Pachcha pillai vaalipanaai Aana pinnum kaaththiduvaa Utchi mudhal kaal varaikkum Ennei vatchu thaeichchiduvaa Ammaavai paaradaa avalaattam yaaradaa Arinjaa nee kooradaa…. Male : Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa…. Male : Thaai veru thaaram veru pengalthaanadaa Aanaalum rendum rendu kangalthaanadaa Male : Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா ஆண் : தாய் வேறு தாரம் வேறு பெண்கள்தானடா ஆனாலும் ரெண்டும் ரெண்டு கண்கள்தானடா ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா ஆண் : தாலிக் கட்டிக் கொண்டவ தாரமென்று வந்தவ தக்க துணையாவாளே எந்நாளும் தான் கொண்டவனைக் காப்பவ குற்றம் குறை தீர்ப்பவ இல்லறத்தின் ஆதாரம் சம்சாரம்தான் ஆண் : கை நிறைய சோறிடுவாள் கண்ணுறங்க பாயிடுவாள் நாயகனின் பேர் விளங்க நல்ல பிள்ளை ஈன்றிடுவாள் சம்சாரம் இல்லையேல் சந்தோஷம் ஏதடா சன்யாசி தானடா… ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா….. ஆண் : பிள்ளை வரம் கேட்டவ பெத்தெடுத்து போட்டவ தொட்டிலிட்டு தாலாட்டி பாலூட்டினாள் எத்தனையோ ராத்திரி பட்டப்பகல் மாதிரி கண் முழிச்சி நாள்தோறும் ஆளாக்கினாள் ஆண் : பச்சப்பிள்ளை வாலிபனாய் ஆன பின்னும் காத்திடுவா உச்சி முதல் கால் வரைக்கும் எண்ணெய் வச்சு தேச்சிடுவா அம்மாவைப் பாரடா அவளாட்டம் யாரடா அறிஞ்சா நீ கூறடா… ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா ஆண் : தாய் வேறு தாரம் வேறு பெண்கள் தானடா ஆனாலும் ரெண்டும் ரெண்டு கண்கள் தானடா ஆண் : தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா….