← Back

Thiruvennum Peyarukku Song Lyrics

Singers : P. Suseela, P. Madhuri and T. K. Kala Music by : D. B. Ramachandran and S. P. Venkatesh Lyrics by : A. Maruthakasi Female : Thiruvennum peyarukku uriyavalo vaa Engal thirumanaiyil nirantharamaai kudiyirukka vaa Chorus : Thiruvennum peyarukku uriyavalo vaa Engal thirumanaiyil nirantharamaai kudiyirukka vaa Female : Thiruvennum peyarukku uriyavalo vaa Female : Porulennum oru sollin arumporulae vaa Porulennum oru sollin arumporulae vaa Valam pongum selvam pathinaarum pongidavae vaa Valam pongum selvam pathinaarum pongidavae vaa Female : Sengamalamthanil thangi nalantharum mangalakaramae vaa Mangaiyar vendidum manjal kungumam Vazhangum varalakshmi vaa Female : Sengamalamthanil thangi nalantharum mangalakaramae vaa Mangaiyar vendidum manjal kungumam Vazhangum varalakshmi vaa Female : Angaiyar kanniyin aaruyir naaththi Sangaran sodhari vaa Sangaran sodhari vaa Female : Ponnil maniyil poovil anbil Porunthi iruppavalae Sennel kadhiril dheepa sudaril Siriththu magizhpavalae Female : Kannal suvaiyil pannin oliyil Kalanthu iruppavalae Kannal suvaiyil pannin oliyil Kalanthu iruppavalae Female : Minnum vaanaga villin yaezhvagai Vannaththil iruppavalae Minnum vaanaga villin yaezhvagai Vannaththil iruppavalae Vannaththil iruppavalae Engal ennaththil iruppavalae Chorus : Thiruvennum peyarukku uriyavalo vaa Female : Thoranai panthalil thogaiyar nagaiyl Thondridum arputhamae Thoranai panthalil thogaiyar nagaiyl Thondridum arputhamae Female : Veerarkal tholinil verththidum uzhaippinil Vilangidum porpathamae Carena pozhinthidum kaalnadai selvaththai Kaaththidum narpathamae Aaranam poottridum naaranan maarbinil Amarnthidum karpagamae Amarnthidum karpagamae Chorus : Thiruvennum peyarukku uriyavalo vaa Engal thirumanaiyil nirantharamaai kudiyirukka vaa
பாடகர்கள் : பி. சுஷீலா, பி. மாதுரி மற்றும் டி. கே. கலா இசையமைப்பாளர் : டி. பி. ராமசந்திரன் மற்றும் எஸ். பி. வெங்கடேஷ் பாடலாசிரியர் : எ. மருதகாசி பெண் : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா எங்கள் திருமனையில் நிரந்தரமாய் குடியிருக்க வா குழு : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா எங்கள் திருமனையில் நிரந்தரமாய் குடியிருக்க வா பெண் : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா பெண் : பொருளென்னும் ஒரு சொல்லின் அரும்பொருளே வா பொருளென்னும் ஒரு சொல்லின் அரும்பொருளே வா வளம் பொங்கும் செல்வம் பதினாறும் பொங்கிடவே வா வளம் பொங்கும் செல்வம் பதினாறும் பொங்கிடவே வா பெண் : செங்கமலம்தனில் தங்கி நலந்தரும் மங்களகரமே வா மங்கையர் வேண்டிடும் மஞ்சள் குங்குமம் வழங்கும் வரலட்சுமி வா….. பெண் : செங்கமலம்தனில் தங்கி நலந்தரும் மங்களகரமே வா மங்கையர் வேண்டிடும் மஞ்சள் குங்குமம் வழங்கும் வரலட்சுமி வா….. பெண் : அங்கையர் கன்னியின் ஆருயிர் நாத்தி சங்கரன் சோதரி வா சங்கரன் சோதரி வா பெண் : பொன்னில் மணியில் பூவில் அன்பில் பொருந்தி இருப்பவளே செந்நெல் கதிரில் தீபச் சுடரில் சிரித்து மகிழ்பவளே பெண் : கன்னல் சுவையில் பண்ணின் ஒலியில் கலந்து இருப்பவளே….. கன்னல் சுவையில் பண்ணின் ஒலியில் கலந்து இருப்பவளே….. பெண் : மின்னும் வானக வில்லின் ஏழ்வகை வண்ணத்தில் இருப்பவளே மின்னும் வானக வில்லின் ஏழ்வகை வண்ணத்தில் இருப்பவளே வண்ணத்தில் இருப்பவளே எங்கள் எண்ணத்தில் இருப்பவளே குழு : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா பெண் : தோரணைப் பந்தலில் தோகையர் நகையில் தோன்றிடும் அற்புதமே தோரணைப் பந்தலில் தோகையர் நகையில் தோன்றிடும் அற்புதமே பெண் : வீரர்கள் தோளினில் வேர்த்திடும் உழைப்பினில் விளங்கிடும் பொற்பதமே காரெனப் பொழிந்திடும் கால்நடை செல்வத்தை காத்திடும் நற்பதமே ஆரணம் போற்றிடும் நாரணன் மார்பினில் அமர்ந்திடும் கற்பகமே…… அமர்ந்திடும் கற்பகமே…… குழு : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா எங்கள் திருமனையில் நிரந்தரமாய் குடியிருக்க வா