← Back

Punjai Undu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Thandhan nana Thandhan nana Thandhan nana Thaanaa…. Male : Hoi thandhan nana Thandhan nana Thandhan nana Thaandhan nanaa…. Male : Punjai undu nanjai undu Pongivarum gangai undu Panjam mattum innum Ingu maaravilla Enga baaradhathil Soththuchanda theeravilla Male : Veedhikkoru katchiyundu Saadhikkoru sangamundu Needhi solla mattum Ingu naadhiyilla Sanam nimmadhiyaa Vaazha oru naalumilla Male : {Idhu naadaa illa Verum kaadaa Idhai ketka yaarum Illai thozhaa} (2) Male : Punjai undu nanjai undu Pongivarum gangai undu Panjam mattum innum Ingu maaravilla Enga baaradhathil Soththuchanda theeravilla Male : Vaanaththai etti nirkum Uyarndha maaligai Yaaringu kattivaithu koduthadhu Oorukku paadupattu Uzhaitha koottamo Veedindri vaasalindri thavikkudhu Male : Ethanai kaalam ippadi pogum Endroru kelvi naalai varum Ullavai ellaam yaarukkum sondham Endringu maarum velai varum Male : Aayiram kaigal koodattum Aanandha raagam paadattum Naalaya kaalam nammodu Nichaiyam undu poraadu Vaanagamum vaiyagamum Engal kaigalil endraadu Male : Punjai undu nanjai undu Pongivarum gangai undu Panjam mattum innum Ingu maaravilla Enga baaradhathil Soththuchanda theeravilla Male : Aatrukku paadhai ingu Yaaru thandhadhu Thaanaaga paadhai kandu nadakkudhu Kaatrukku paattu cholli Yaaru thandhadhu Thaanaaga paatu onnu padikudhu Male : Enniya yaavum kaigalil saerum Nambikkai vendum nenjukkullae Kaalaiyil thondrum sooriyan polae Ponnoli vendum kannukkullae Male : Cheriyil thendral veesaadhaa Ezhaiyai vandhu theendaadhaa Gangai therkae payaadha Kaveri odu seraadha Paadupadum thozhargalin Tholgalil maalai soodaadhaa Male : Punjai undu nanjai undu Pongivarum gangai undu Panjam mattum innum Ingu maaravilla Enga baaradhathil Soththuchanda theeravilla Male : {Idhu naadaa illa Verum kaadaa Idhai ketka yaarum Illai thozhaa} (2)
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தந்தன் னானா தந்தன் னானா தந்தன் னானா தானா…. ஆண் : ஹோய் தந்தன் னானா தந்தன் னானா தந்தன் னானா தந்தன் னானா….. ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே ஆண் : வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே ஆண் : {இது நாடா இல்லே வெறும் காடா இதக் கேக்க யாரும் இல்லே தோழா} (2) ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே ஆண் : வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றித் தவிக்குது ஆண் : எத்தனை காலம் இப்படிப் போகும் என்றொரு கேள்வி நாளை வரும் உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு வாழும் வேளை வரும் ஆண் : ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும் நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே ஆண் : ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது தானாகப் பாதை கண்டு நடக்குது காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது ஆண் : எண்ணிய யாவும் கைகளில் சேரும் நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே காலையில் தோன்றும் சூரியன் போலே பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே ஆண் : சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா கங்கையும் தெற்கே பாயாதா காவிரியோடு சேராதா பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே ஆண் : {இது நாடா இல்ல வெறும் காடா இத கேக்க யாரும் இல்லே தோழா} (2)